'தல' பார்முக்கு வந்தாச்சு..இனிமே எப்பவும் வாண வேடிக்கைதான். தோனியை புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்!

மும்பை: கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அடித்த ஒரே ஒரு சிக்ஸர் மூலம் தனது ஸ்டெமினாவை நிரூபித்த தோனியை பாராட்டிய சுனில் கவாஸ்கர் இதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். நாம் இன்னும் நிறைய சிக்சர்களை பார்ப்போம் என்று கூறியுள்ளார்.

Dhoni வெச்ச நம்பிக்கை Ruturaj Gaikwad விமர்சனங்களுக்கு செம்ம பதிலடி| Oneindia Tamil

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சி.எஸ்.கே 18 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது.

தொடர் காயங்களால அவதிப்படும் வீரர்கள்... அவங்களோட காயங்கள் எப்படி இருக்கு பாக்கலாமா? தொடர் காயங்களால அவதிப்படும் வீரர்கள்... அவங்களோட காயங்கள் எப்படி இருக்கு பாக்கலாமா?

இந்த தொடரில் பார்மில் இல்லாமல் தவித்த ருத்ராஜ் கெய்க்வாட், டூ பிளிசிஸ் ஆகியோரின் ருத்ரதாண்டவம் மற்றும் தீபக் சாகரின் மிரட்டலான பவுலிங் ஆகியவை சென்னை அணிக்கு ஹாட்ரிக் வெற்றியை பெற்று கொடுத்தது.

 தோனியின் அதிரடி கம்பேக்

தோனியின் அதிரடி கம்பேக்

இந்த வெற்றி சென்னை ரசிகர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்து இருந்தாலும், சென்னை கேப்டன் 'தல' தோனியின் அதிரடி கம்பேக் ரசிகர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த சீசனைபோல் அல்லாமல் இந்த சீசனில் முதல் போட்டியில் தோல்வியை தழுவிய சி.எஸ்.கே, ஆனால் அடுத்தடுத்து வெற்றி பெற்று புள்ளி பட்டிலில் முதலிடம் பிடித்தது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ஆனால் பழைய தோனியை பார்க்க வேண்டும் என்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முதல் போட்டியில் முதல் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார் தோனி. பஞ்சாப்புக்கு எதிரான போட்டியிலும் 7-வதாக இறங்கிய தோனி ரன் அடிக்க சிரமப்பட்டார். 18 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். கொல்கத்தா உடனான போட்டியில் தோனி ரன் அடிக்க வேண்டும் வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஒரு சிக்ஸர் போதும்

ஒரு சிக்ஸர் போதும்

16.3 ஓவர்களில் 164 ரன்களுக்கு நன்றாக ஆடி வந்த மெயின் அலி அவுட் ஆனபோது 4-வதாக களமிறங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் தோனி. தொடக்கத்தில் சிறிது தடுமாறினாலும் பிரசித் கிருஷ்ணாவின் பவுலிங்கில் மிட் ஆப் திசையில் பிரமாண்ட சிக்ஸர் விளாசினார் தோனி. 8 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து அணிக்கு சிறு பங்களிப்பு கொடுத்தார்.

 சுனில் கவாஸ்கர் பாராட்டு

சுனில் கவாஸ்கர் பாராட்டு

தோனி பார்முக்கு திரும்பியதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகினறனர். இதேபோல் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரும் தோனியை புகழ்ந்து தள்ளியுள்ளார். இது தொடர்பாக சுனில் கவாஸ்கர் கூறுகையில், ' தோனி நிலைமையை நன்றாகப் புரிந்துகொண்டார். ராயுடு, ரெய்னா அல்லது ஜடேஜாவை விட ரன் ரேட் அதிகரிக்க தான் தேவை என்பதை அவர் உணர்ந்தார். ஒரு இன்னிங்ஸின் சிறிய பங்களிப்பை அவர் செய்தார்.

இதையே தொடருங்கள்

இதையே தொடருங்கள்

இது மிகவும் சிறப்பான ஒன்றாகும். இந்தியா முழுவதும் அவர் இவ்வாறு பேட் செய்வதை விரும்புகிறது. அவருக்கு சிறப்பு திறமை உள்ளது. நாம் இன்னும் இதுபோல் நிறைய சிக்ஸர்களைப் பார்ப்போம். தோனி தொடர்ந்து 4-வது அல்லது 5-வது இடத்தில் களமிறங்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்தார். கவாஸ்கரை போல் தோனியின் பார்ம் தொடர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
This is what we expect from Dhoni said Sunil Gavaskar, who praised Dhoni for proving his stamina with the only six he scored in the match against Kolkata. He said we will see a lot more sixes
Story first published: Thursday, April 22, 2021, 16:14 [IST]
Other articles published on Apr 22, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X