மறுத்த கெய்ல்
இதனால் அதுவே அவருடைய கடைசி ஒருநாள் ஆட்டம் என எண்ணப்பட்டது. ஆனால் பேட்டியின் வழியாக அதை மறுத்துள்ளார் கெயில். தான் ஒருநாளும் ஓய்வை பற்றி அறிவிக்கவே இல்லை என்று கூறியிருக்கிறார்.

ஜெர்சி எண்
முன்னதாக, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது. வழக்கமாக கிறிஸ் கெய்ல் ‘45' எண் பொறித்த ஜெர்சிதான் அணிந்து விளையாடுவார்.

301 வந்தது எப்படி?
ஆனால் அந்த போட்டியில் 301 எண் பொறித்த ஜெர்சியுடன் விளையாடினார். இது அவருக்கு போட்டி அவருக்கு 301வது ஒருநாள் போட்டியாகும். அதனால் இந்த போட்டியுடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கடைசி தொடராகும்
ஏற்கனவே உலக கோப்பையுடன் அவர் ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. பின்னர் அவருக்கு வழியனுப்பும் போட்டி ஒன்று நடத்தப்படும் என்றும் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர், அவருக்கு கடைசி தொடராக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அனைத்தையும் ஒரேயொரு வீடியோவில் மறுத்திருக்கிறார் கெயில்.


Click it and Unblock the Notifications











