Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் வருவேன்... மறுபடியும் டெஸ்ட் போட்டிகளில் ஆட வருவேன்.. கெய்ல் நம்பிக்கை

சென்னை: நான் மீண்டும் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் டெஸ்ட் அணியில் இடம் பெறுவேன் என்று அதிரடிப் புயல் கிறிஸ் கெய்ல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல். ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் புயல் போல ஆடக் கூடியவர். இவரது அதிரடி ஆட்டத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் பெருவாரியாக உண்டு.

குறிப்பாக டி20 போட்டிகளில் இவர் தான் கிங். நின்ற இடத்திலிருந்தே செஞ்சுரி போடக் கூடிய அசகாய சூரர். ஆனால் இவருக்கும் இவரது கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். இதனால் மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் இவருக்கு அடிக்கடி இடம் கிடைக்காமல் போய் விடுகிறது.

20 ஓவர் மட்டும்

20 ஓவர் மட்டும்

தற்போது கிறிஸ் கெய்ல் 20 ஓவர் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார். 36 வயதான கெய்ல், கடந்த 2014ம் ஆண்டுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் ஆடவில்லை. அதேபோல கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ஒரு நாள் போட்டியிலும் அவர் ஆடவில்லை.

ஐபிஎல் ராஜா

ஐபிஎல் ராஜா

ஐபிஎல் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும் மட்டுமே தற்போது இவர் ஆடி வருகிறார். குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் இவர் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அதேபோல பிற நாடுகளில் நடைபெறும் டி20 போட்டிகளிலும் கெய்ல் ஆடி வருகிறார்.

தமிழ்நாடு பிரீமியல் லீக்

தமிழ்நாடு பிரீமியல் லீக்

இந்த நிலையில் கெய்ல் தமிழ்நாடு வந்துள்ளார். தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளை புரமோட் செய்ய வந்துள்ள அவர் நேற்று சென்னை வேலம்மாள் பள்ளிக்குச் சென்று மாணவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அவர் ஜாலியான பேட்டியும் அளித்தார். அவரது பேட்டியிலிருந்து...

ஜெயவர்த்தனே பெஸ்ட்

ஜெயவர்த்தனே பெஸ்ட்

டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி ரன்களை குவிக்கும் வீரர் 20 ஓவர் போட்டிக்கு ஏற்ற வகையில் இருப்பார். சரியான முறையில் ஷாட்களை தேர்வு செய்வார். உதாரணத்துக்கு ஜெயவர்த்தனே சிறந்த டெஸ்ட் வீரர். 20 ஓவர் போட்டியிலும் அவர் அபாரமாக ஆடியவர்.

நானும் கலக்குவேன்

நானும் கலக்குவேன்

எல்லாமே, மனநிலையில்தான் வேறுபாடு இருக்கிறது. விளையாட்டில் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். என்னால் மீண்டும் டெஸ்டில் விளையாட முடியும். டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இடம் பெறுவேன் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

ராகுல் கலக்குகிறார்

ராகுல் கலக்குகிறார்

இந்திய அணியின் புதிய வீரர் கே.எல். ராகுலின் பேட்டிங் ஸ்டைல் நேர்த்தியாக இருக்கிறது. டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர் ஆகிய 3 நிலைகளிலும் அவர் வெற்றிகரமாக பேட்டிங் செய்கிறார். அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக ஜொலிக்கிறார். தனது ஆட்டத் திறனை அவர் ஏற்கனவே நிரூபித்து விட்டார் என்றார் கெய்ல்.

103 டெஸ்ட்

103 டெஸ்ட்

இதுவரை கெய்ல் 103 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். 7,214 ரன் எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 42.18 ஆகும். 15 சதமும், 37 அரை சதமும் நொறுக்கியுள்ளார். தற்போது ஐபிஎல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஸ்டார் வீரராக ஜொலித்து வருகிறார் கெய்ல்.

Story first published: Wednesday, September 7, 2016, 14:24 [IST]
Other articles published on Sep 7, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+