WATCH: என்ன மனுசரய்யா நீர்..!! உனக்கு ஓய்வே கிடையாதா..? ஆட்டத்தை பார்த்து மிரண்ட பவுலர்
பிராம்டன்: கனடா ப்ரீமியர் லீக்கில் சிக்சர் மன்னன் கெய்ல் ஒரே ஓவரில் 32 ரன்கள் குவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
கனடாவில் நடைபெற்று வரும் குளோபல் டி20 தொடரில் வான்கூவர் நைட்ஸ் மற்றும் எட்மொண்டன் ராயல்ஸ் அணிகள் மோதின. அதில், வான்கூவர் அணிக்காக வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் விளையாடினார்.

முதலில் பேட்டிங் செய்த எட்மொண்டன் அணி 165 ரன்கள் எடுத்தது. 166 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய வான்கூவர் அணியில் கெயில் அதிரடி காட்டினார். தொடக்கத்தில் கொஞ்சம் நிதானமாகத் தான் மட்டையை சுழற்றினார்.
அப்புறம் வழக்கம் போல பந்துகளை பவுண்டரிகளாகவும், சிக்சர்களாகவும் அடித்து தள்ளினார். குறிப்பாக, பாகிஸ்தான் வீரர் சதாப் கான் வீசிய 13வது ஓவர். ரன் மழையை தான் பொழிந்தார் கெயில்.
முதல் 2 பந்துகளை சிக்சருக்கு விளாசிய அவர், அடுத்த 2 பந்துகளில் பவுண்டரிகள் விளாசினார். கடைசி 2 பந்துகளிலும் சிக்சர் அடித்து அந்த ஓவரை பிரித்து மேய்ந்து விட்டார். கடைசியில் 44 பந்துகளில் 94 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
கெயில் அதிரடியால் அவரது அணியும் வென்றது. கடந்த போட்டியில் 122 ரன்கள் குவித்த கெயில், இப் போட்டியில் 6 ரன்களில் சதத்தை நழுவவிட்டார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.


Click it and Unblock the Notifications