Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"புயல்" வீசாத போதும் புழுதி கிளப்பிய வெஸ்ட் இண்டீஸ்!

பெங்களூர்: கிறிஸ் கெய்ல் நேற்றைய போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு கையில் காயம் தசைப் பிடிப்பு ஏற்பட்டது இருப்பினும் நேற்றைய போட்டியில் இலங்கையை புரட்டி எடுத்து விட்டது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. தொடரச்சியான 2வது வெற்றியை ஈட்டி அசத்தி விட்டது.

கிறிஸ் கெய்லுக்கு ஏற்பட்டுள்ள தசைப்பிடிப்பு சீரியஸானதல்ல என்று மேற்கு இந்தியத் தீவுகள் அணி நிர்வாகம் கூறியுள்ளது. இருப்பினும் ரிஸ்க் எடுக்க விரும்பாத காரணத்தால்தான் கெய்ல் நேற்றைய போட்டியில் விளையாடவில்லை.

அவர் விளையாடாவிட்டாலும் கூட பேட்டும் கையுமாகத்தான் உலாவிக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட இலங்கை அணிக்கு "டர்"ரைக் கிளப்பும் வகையில் அவர் உலவியது போலவே தெரிந்தது. மேலும் கெய்ல் செய்ய வேண்டிய வேலையை பிளட்சர் செய்து இலங்கையை காலி செய்து விட்டார்.

பீல்டிங்கின்போது தசைப்பிடிப்பு

பீல்டிங்கின்போது தசைப்பிடிப்பு

இலங்கை அணி நேற்றைய உலகக் கோப்பைப் போட்டியின்போது முதலில் பேட்டிங் செய்தது. அப்போது பீல்டிங் செய்தபோது கெய்லுக்கு இடது கையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு விட்டது.

பேட் செய்யவில்லை

பேட் செய்யவில்லை

இதன் காரமாக மேற்கு இந்தியத் தீவுகள் அணி பின்னர் பேட் செய்ய வந்தபோது கெய்ல் தொடக்க ஆட்டக்காரராக இறங்கவில்லை. இடையில் இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

கெய்ல் கெய்ல்!

கெய்ல் கெய்ல்!

பெங்களூரில் கெய்லுக்கு ரசிகர்கள் ஏகப்பட்ட பேர் உள்ளனர். காரணம் அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஐபிஎல்லில் ஆடி வருவதால். இதனால் நேற்று போட்டியைக் காண வந்த ரசிகர்கள் வீ வான்ட் கெய்ல் என்று கூறி கோஷமிட்டபடி இருந்தனர்.

வருவார்.. ஆனால் வரவில்லை

வருவார்.. ஆனால் வரவில்லை

ஆண்ட்ரே பிளட்சர் அல்லது ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோரில் ஒருவர் அவுட் ஆனால் கெய்ல் பேட் செய்ய வருவார் என்று மேற்கு இந்தியத் தீவுகள் அணி நிர்வாகமும் அறிவித்திருந்தது. ஆனால் கடைசி வரை இருவரும் அவுட்டாகாமல் அடித்து நொறுக்கி பட்டையைக் கிளப்பி விட்டதால் கெய்லுக்கு வேலையில்லாமல் போய் விட்டது.

முதல் போட்டியில் அட்டாக்

முதல் போட்டியில் அட்டாக்

மேற்கு இந்தியத் தீவுகளின் முதல் போட்டியில் கெய்ல் அட்டகாசமாக ஆடி 47 பந்துகளில் சதம் போட்டு சத்தாய்த்து விட்டார் என்பது நினைவிருக்கலாம். நேற்று பெங்களூர் ரசிகர்களுக்கு கெய்ல் புயலைக் காணும் பாக்கியம் கிடைக்காமல் போய் விட்டது.

Story first published: Monday, March 21, 2016, 11:21 [IST]
Other articles published on Mar 21, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+