Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாரு சாமி நீ.. எங்களவிட பெரிய கோலி ரசிகனா இருக்க.. வெ.இ வீரர் ஜோஷ்வா சில்வா பேச்சை கொஞ்சம் பாருங்க!

ட்ரினிடாட்: இந்திய வீரர் விராட் கோலியின் ஆட்டத்தை பார்ப்பதற்காக தனது அம்மா நேரில் வரவிருப்பதை வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜோஷ்வா சில்வா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை ஒரு சில வீரர்களுக்கு மட்டுமே எதிரணி வீரர்களும் ரசிகர்களாக இருப்பார்கள். விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின், பிரையன் லாரா, ஏபி டி வில்லியர்ஸ் உள்ளிட்டோருக்கு பின் அந்த சிம்மாசனத்தில் விராட் கோலி மட்டுமே சம காலத்தில் அமர்ந்திருக்கிறார். விராட் கோலி எங்கு போனாலும் எதிரணி வீரர்களும் வந்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விருப்பமாக இருப்பார்கள்.

Get Your hundred Virat Kohli says West Indies Player Joshua Da Silva talks in Stump Mic

அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள விராட் கோலியை சந்திக்க வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சோபர்ஸ் வந்திருந்தார். அதேபோல் பிரையன் லாரா சில நிமிடங்கள் சந்தித்து பேசி இருந்தார். இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தின் போது, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜோஷ்வா சில்வா களத்திலேயே ரசிகராக செயல்பட்ட சம்பவம் இந்திய ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய நாளின் போது விராட் கோலி , அதிவேகமாக ரன்களை ஓடி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஜோஷ்வா சில்வா, "2012 முதல் நீங்கள் இதனை தான் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு ரன் சேர்க்க வேண்டிய இடத்தில், 2 ரன்களாக மாற்றிவிடுகிறீர்கள்" என்று பாராட்டினார். அதேபோல் விராட் கோலி 70 ரன்களை கடந்து ஆடிய போது, "சதத்தை விளாசிவிடுங்கள்" விராட் என்று ஜோஷ்வா சில்வா அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கு விராட் கோலி, நான் மைல்கல்லை எட்டுவதில் நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்களே என்று கிண்டல் செய்துள்ளார். அதற்கு ஜோஷ்வா சில்வா, "எனக்கு நன்றாக தெரியும். ஆனால் நீங்கள் சதம் விளாச வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்" என்று கூறியுள்ளார். இந்த உரையாடல் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து விராட் கோலி ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், நேற்றைய நாளின் ஆட்டத்திற்கு பின் ஜோஷ்வா சில்வா பேசுகையில், எனது அம்மா செல்போனில் அழைத்து விராட் கோலியின் ஆட்டத்தை நேரில் பார்க்க வருவதாக தெரிவித்திருக்கிறார். இதனை என்னால் நம்ப முடியவில்லை என்று சிரித்துக் கொண்டே கூறினார். இது இந்திய ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Friday, July 21, 2023, 11:54 [IST]
Other articles published on Jul 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+