Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

55 பந்துகளில் 120 ரன்கள்.. 12 பவுண்டரி,8 சிக்சர் விளாசிய மேக்ஸ்வெல்.. ரோகித் சாதனை சமன்

Glenn Maxwell : வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளான் மேக்ஸ்வெல் சதம் அடித்து அசத்தி இருக்கிறார். மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் இரண்டாவது டி20 போட்டி அடிலெய்ட் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் 22 ரன்களிலும் ஜோஸ் இங்கிலீஷ் 4 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர்.

WI vs AUS 2nd t20 - Glenn Maxwell hits 120 runs from 55 balls and equals rohit sharma record

கேப்டன் மிட்செல் மார்ஸ் 29 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஒரு கட்டத்தில் களத்திற்கு வந்த மேக்ஸ்வெல் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சிதற அடித்தார். பவுண்டரி, சிக்ஸர் என மேக்ஸ்வெல் பறக்க விட 25 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். ஆனால் அத்துடன் அவர் தன்னுடைய அதிரடியை நிறுத்தவில்லை. மேக்ஸ்வெல் 50 பந்துகளில் எல்லாம் சதத்தை அடித்தார்.

இதன் மூலம் மேக்ஸ்வெல் சாதனை ஒன்றை சமன் செய்து இருக்கிறார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவின் சாதனையை மேக்ஸ்வெல் சமன் செய்திருக்கிறார். ரோகித் சர்மா 143 இன்னிங்ஸில் 5 சதம் அடித்துள்ள நிலையில் மேக்ஸ்வெல் 94 இன்னிங்ஸில் எல்லாம் 5 சதம் அடித்திருக்கிறார்.

55 பந்துகளில் மேக்ஸ்வெல் 120 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 12 பவுண்டரிகளும், 8 இமாலய சிக்சர்களும் அடங்கும். ஸ்ட்ரைக் ரேட் 218 என்ற அளவில் அவர் வைத்திருந்தார். இறுதியில் டிம் டேவிட் 14 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார். இதில் இரண்டு பவுண்டர்களும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்து இருக்கிறது.

Story first published: Sunday, February 11, 2024, 16:46 [IST]
Other articles published on Feb 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+