Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'மந்திரக்காரன்' மேக்ஸ்வெல்... ஸ்கெட்ச் ரெடி.. சிக்குவாரா? சிதறுவாரா?

சென்னை: ஐபிஎல் தொடர்களில் கடந்த நான்கைந்து சீசன்களாகவே சொதப்பிக் கொண்டிருக்கும் கிளென் மேக்ஸ்வெல், எந்த அணியில் ஏலம் எடுக்கப்படுவார் என்பதே இன்றைய ஹாட் 'மினி மீல்ஸின்' எதிர்பார்ப்பாக உள்ளது

ஐபிஎல் 2021 தொடருக்கான மினி ஏலம், சென்னையில் இன்று நடைபெறுகிறது. இதில், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவன் ஸ்மித் உள்ளிட்ட பல முக்கிய வீரர்கள் ஏலத்தில் வரவுள்ளனர். சிறிய ஏலம் என்றாலும், முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

ஏனெனில், கடந்த முறை சொதப்பிய சிஎஸ்கே, ஆர்சிபி, பஞ்சாப் உள்ளிட்ட அணிகள், இந்த ஏலத்தில் தனது பெஞ்ச் பிரச்சனைகளை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அதனால் தான் பல வீரர்கள் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கின்றனர்.

 அது ஒரு கனாக்காலம்

அது ஒரு கனாக்காலம்

இதில் குறிப்பிடத்தகுந்த வீரர் மேக்ஸ்வெல். அண்ணன் அடித்தால் அடி.. இடித்தால் இடி.. மிதித்தால் மிதி.. என்று ஒருகாலத்தில் ஐபில் பெவிலியன்களை தனது சிக்ஸர்களால் பதற வைத்தவர். ஆனால், இதெல்லாம் 'அது ஒரு கனாக்காலம்' மோட் தான்.

 டெரர் ஸ்டிரைக் ரேட்

டெரர் ஸ்டிரைக் ரேட்

2014ல் நடந்த ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடிய மேக்ஸ், தனது மேக்ஸ் ஐபிஎல் ரன்களான 552-ஐ பதிவு செய்தார். ஆவரேஜ் 34.50. ஸ்டிரைக் ரேட் உங்களை மிரள வைக்கும். 187.75. அதனால் தான் அண்ணன் அடித்தால் அடி... பன்ச் டயலாக்ஸ் எல்லாம்.

கம்பேக்

கம்பேக்

ஆனால், 2015ல் மொத்தமாகவே 145, 2016ல் 179, 2017ல் 310, 2018ல் 169 என்று உருட்டிக் கொண்டிருந்தவர், போன 2020 சீசனில், 'படுத்தேவிட்டானய்யா' மோடுக்கு சென்றுவிட்டார். 13 போட்டிகளில் 108 ரன்கள். ஒரு சிக்ஸ் கூட கிடையாது. நம்ப முடிகிறதா? அதான் மேக்ஸ்வெல். இருந்தாலும், போன ஐபிஎல் முடிந்த பிறகு, ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 45, 63, 59 ரன்கள் ஸ்கோர் செய்து 2021 ஏலத்துக்கு அங்கேயே சிக்னல் கொடுத்துவிட்டார்.

 கோலி ஆர்வம்

கோலி ஆர்வம்

அதற்கு ஏற்றார் போல், பஞ்சாப்பும் அவரை ரிலீஸ் செய்ய, பெங்களூருவும், சென்னையும் அவரை ஏலத்தில் எடுக்க அதிகம் ஆர்வம் காட்டுகின்றன. ஆர்சிபி அணியில் தேவ்தத் படிக்கலுடன் ஓப்பனிங் வீரராகவோ அல்லது மிடில் ஆர்டர் வீரராகவோ களமிறக்க திட்டமிட்டு, இவரை ஆர்சிபி ஆக்ஷனில் எடுக்கலாம். அதேபோல், ஷேன் வாட்சன் ஓய்வு பெற்றுவிட்டதால், அவருக்கு மாற்றாக மேக்ஸ்வெல்லை சிஎஸ்கே எடுக்கலாம். அதுவும், ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக. தவிர, இவர் பந்தும் வீசுவார் என்பதால், தோனியின் ஃபேவரைட் லிஸ்டில் மேக்ஸ்வெல்லுக்கு நிச்சயம் இடம் இருக்கும். அதற்காகவே மஞ்சள் அணி, இவருக்காக மல்லுக்கட்டலாம்.

அதேசமயம், இவர் 'UNSOLD' ஆகக் கூட வாய்ப்புள்ளது மக்களே!.

Story first published: Thursday, February 18, 2021, 14:11 [IST]
Other articles published on Feb 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+