Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் வந்தா மட்டும் எப்படி ரெடி ஆகுறாங்க.. காயத்திலிருந்து குணமடைந்த மேக்ஸ்வெல்.. இந்தியா வருகை?

மெல்போர்ன் : பிரபல ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் காயத்திலிருந்து குணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாட்டுக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தாலும், தற்போது பல வீரர்கள் முன்வருவதில்லை. கேட்டால் தாங்கள் காயம் அடைந்து விட்டதாகவும், காயம் குணமடைய காலம் ஆகும் எனக் கூறி வாய்ப்பை தட்டி கழித்து வருகின்றனர்.

உதாரணத்திற்கு இந்திய அணியின் நட்சத்திர பும்ரா பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடாமல் இன்னும் காயத்திலிருந்து குணமடையவில்லை என்று கூறி தப்பித்து விட்டார்.

பார்டியில் காயம்

பார்டியில் காயம்

தற்போது எஞ்சிய இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பும்ரா பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது. இதனால் அவர் நேரடியாக ஐபிஎல் தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளார். தற்போது இதே வழியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் பின்பற்றி வருகிறார். கடந்த டி20 உலக கோப்பை தொடங்கும் போது ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்பே வெளியேறியது.அதன் பிறகு தன்னுடைய நண்பரின் பார்ட்டியில் கலந்து கொண்ட மேக்ஸ்வெல் போதையில் கீழே விழுந்து அடி வாங்கினார்.

மீண்டும் திரும்புகிறார்

மீண்டும் திரும்புகிறார்

இந்த நிலையில் கடந்த மூன்று மாதமாக எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்காத மேக்ஸ்வெல் தற்போது ஐபிஎல் தொடர் வரப்போகிறது என தெரிந்தவுடன், தன்னுடைய உடல் தகுதி எட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். தொடர் ஓய்வில் இருந்த மேக்ஸ்வெல் தற்போது தனது பார்மை மீட்பதற்காக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

இதற்காக மார்ஸ் ஷிபீல்ட் ஷில்ட் தொடரில் தெற்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் விக்டோரியா அணிக்காக மேக்ஸ்வெல் களமிறங்குகிறார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்த தொடரில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் மேக்ஸ்வெல் முன்பே விளையாடி தனது பார்மை நிரூபித்து இருந்தால் அவர் இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் பங்கேற்று இருந்திருப்பார்.

பல்வேறு டி20 தொடர்

பல்வேறு டி20 தொடர்

ஆனால் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்பதற்காக மேக்ஸ்வெல் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஐபிஎல் மட்டுமல்லாமல் இங்கிலாந்து டி20 பிளாஸ்ட் தொடரில் பிரம்மங்கம் அணிக்காகவும் டி 100 தொடருகாக லண்டன் ஸ்பிரிட் அணிக்காகவும் மேக்ஸ்வெல் விளையாட ஒப்புக்கொண்டுள்ளார். இதனிடையே ஐபிஎல் தொடருக்கு முன்பு மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் இந்தியாவில் வரும் மார்ச் மாதம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்று ஐபிஎல் தொடருக்கு தயாராக மேக்ஸ்வெல் திட்டமிட்டு உள்ளார்.

Story first published: Friday, February 17, 2023, 23:39 [IST]
Other articles published on Feb 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+