சூர்யகுமார் யாதவ்க்கு இது கடைசி வாய்ப்பு..ஒருநாள் கிரிக்கெட்டில் சாதிப்பாரா? காத்திருக்கும் வீரர்கள்
மும்பை : சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சூரியகுமார் யாதவ், தன்னுடைய மேஜிக்கை வெளிப்படுத்தாமல் இருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் வேத தூதுவனாக விளங்கும் சூரியகுமார் யாதவ், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
இதனால் சூரியகுமார் யாதவ் வெறும் டி20 வீரர் என்று முத்திரை குத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. உள்ளூரில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் சூரிய குமார் யாதவ் 1222 போட்டிகளில் விளையாடி 3287 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதில் சராசரியாக 35 ரன்கள் அடங்கும். இதில் கவனிக்கப்பட வேண்டியது அவருடைய அதிரடி ஸ்ட்ரைக் ரேட் தான். ஒரு நாள் கிரிக்கெட்டில் 104 என்ற வகையில் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் சூர்யகுமார்
இதில் மூன்று சதங்களும் 19 அரை சதங்களும் அடங்கும். ஆனால் இதனை அப்படியே சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் வெளிப்படுத்த சூரியகுமார் யாதவ் தடுமாறி வருகிறார். இதுவரை 18 இன்னிங்ஸில் விளையாடியுள்ள சூரியகுமார் யாதவ் மொத்தமாகவே 433 ரன்களை தான் அடித்திருக்கிறார். இதில் இரண்டு அரை சதம் மட்டும் அடங்கும்.

வெளிப்படுத்தவில்லை
இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 102 என்று அளவில் இருந்தாலும் சராசரி வெறும் 28 என்ற அளவில் தான் இருக்கிறது. நியூசிலாந்து தொடரில் சூரிய குமார் யாதவுக்கு இரண்டு இன்னிங்ஸில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதில் அவர் 31 மற்றும் 14 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதனால் சூரியகுமார் யாதவ் தன்னுடைய முழு திறமையை இன்னும் ஒரு நாள் கிரிக்கெட்டில் வெளிப்படுத்தவில்லை.

பொன்னான வாய்ப்பு
அதுவே ஸ்ரேயாஸை எடுத்துக் கொண்டால் இரண்டு சதம் மற்றும் ஐந்து அரை சதம் என 20 இன்னிங்ஸில் அடித்து சராசரியாக 47 என்ற அளவில் வைத்திருக்கிறார். இதனால் சூரிய குமாரா? ஸ்ரேயாஸ் ஐயரா? என்ற கேள்வி வந்தால் ஸ்ரேயாஸ் ஐயரை தேர்வு செய்வது தான் சரியாக இருக்கும். தற்போது ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டு இருப்பதால் சூரியகுமார் யாதவுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

கடினமாகிவிடும்
இதனை சூர்யா சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டியில் சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனையும் அவர் வீணடித்து விட்டால் நிச்சயம் ஒரு நாள் கிரிக்கெட்டில் சூரியகுமார் யாதவ் திரும்புவது மிகவும் கடினமாகும். ஏனென்றால் வாய்ப்புக்காக சஞ்சு சாம்சன், ருத்ராஜ் கெய்க்வாட் போன்ற வீரர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications