Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல்ல 26... இப்ப 52... இரண்டாவது இன்னிங்சில் ஹிட்மேன் அதிரடி... சிறப்பான துவக்கம்

சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா இரண்டாவது இன்னிங்சில் ஆடி வருகிறது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 26 ரன்களை அடித்த ரோகித் சர்மா தற்போது இரண்டாவது இன்னிங்சில் 52 ரன்களை அடித்துள்ளார்.

துவக்க வீரர் சுப்மன் கில்லுடன் இணைந்து அவர் அதிரடி பார்ட்னர்ஷிப்பை அமைத்து இந்திய அணிக்கு சிறப்பான துவக்கத்தை அளித்துள்ளார்.

3வது டெஸ்ட் போட்டி

3வது டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 3வது டெஸ்ட் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் 2வது இன்னிங்சில் 407 ரன்களை இலக்காக கொண்டு இந்தியா ஆடி வருகிறது. ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் துவக்க வீரர்களாக களமிறங்கி ஆடிய நிலையில் 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 98 ரன்களை அடித்து 2 விக்கெட்டுகளை இந்தியா இழந்துள்ளது.

சிறப்பான ரோகித் சர்மா

சிறப்பான ரோகித் சர்மா

இந்த போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கி சிறப்பான துவக்கத்தை அளித்துள்ளனர். குறிப்பாக கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக டெஸ்ட் போட்டிகளில் ஆடாத ரோகித் சர்மா தற்போது முதல் இன்னிங்சில் 26 ரன்களும் 2வது இன்னிங்சில் 52 ரன்களும் அடித்துள்ளார்.

பிட்னசை நிரூபித்த ரோகித்

பிட்னசை நிரூபித்த ரோகித்

ஐபிஎல் போட்டிகளில் காயம் காரணமாக சில போட்டிகளில் பங்கேற்காத ரோகித் சர்மா ஆயினும் தனது அணிக்கு 5வது வெற்றியை பரிசளித்தார். தொடர்ந்து தனது பிட்னசை என்சிஏவில் நிரூபித்து தற்போது இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான இறுதி 2 போட்டிகளில் விளையாடவுள்ளார்.

நிரூபித்த ஹிட்மேன்

நிரூபித்த ஹிட்மேன்

கடந்த 2019 நவம்பர் மாதத்தில் அவர் இறுதியாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். மேலும் தற்போது தொடர்ந்து 14 நாட்கள் குவாரன்டைன், பயிற்சி ஆட்டங்களில் விளையாடாத நிலை, நெட் பயிற்சிகளில் மட்டுமே ஈடுபட்டது என்பதை தாண்டி தற்போதைய சிட்னி டெஸ்ட் போட்டியில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி தான் எப்போதுமே ஹிட்மேன் தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் ரோகித் சர்மா.

Story first published: Sunday, January 10, 2021, 14:24 [IST]
Other articles published on Jan 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+