விளையாடலன்னாலும் பாராட்ட மறக்கலை புது மாப்பிள்ளை பும்.. பும்.. பும்ரா!
டெல்லி : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரை இந்தியா 3க்கு 1 என்ற கணக்கில் வெற்றி கொண்டுள்ளது.

தன்னுடைய திருமணம் காரணமாக இந்த தொடரின் இறுதிப் போட்டி மற்றும் அடுத்ததாக நடைபெறவுள்ள குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டில் பும்ரா பங்கேற்கவில்லை.
திருமண ஏற்பாடுகளில் பிசியாக இருந்தபோதிலும், இந்திய அணியின் டெஸ்ட் தொடர் வெற்றிக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தன்னுடைய திருமணம் காரணமாக இந்தியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டி மற்றும் அடுத்ததாக நடைபெறவுள்ள குறைந்த ஓவர்கள் போட்டிகளில் பங்கேற்காமல் வெளியேறியுள்ளார் இந்திய பௌலர் ஜஸ்பிரீத் பும்ரா. அவருடைய மனைவியாக போவது யார் என்பது குறித்து இணையதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தன்னுடைய பிசியான வேலைகளுக்கு இடையிலும் இந்திய அணியின் வெற்றியை பாராட்ட தவறவில்லை புது மாப்பிள்ளை பும்ரா. இந்திய அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் புகைப்படத்தை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கடின உழைப்புக்கு எப்போதுமே பலன் உண்டு என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications