For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

RR vs GT - ஆரம்பத்தில் விக்கெட் எடுத்ததும் அலட்சியம்? குஜராத் வீரர்களை கண்டித்த ஹர்திக் பாண்டியா !

அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான், குஜராத் அணிகள் மோதிய ஆட்டம் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் முடிவடைந்தது. 178 ரன்கள் என்ற இலக்கை ராஜஸ்தான் அணி துரத்தியபோது ஆரம்பத்தில் நான்கு ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட் இழந்தது.

இருப்பினும் சஞ்சு சாம்சன், சிம்ரன் ஹெட்மயர் ஆகியோர் அதிரடியாக விளையாடி ராஜஸ்தான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா,இந்த டி20 கிரிக்கெட்டின் அழகே இதுதான் போட்டி எப்போதுமே முடிவடைந்து விடாது.

இதை தான் நான் என் அணி வீரர்களுக்கு பாடமாக சொல்ல விரும்புகிறேன். கடைசி பந்து முடியும் வரை ஆட்டம் முடிந்து விடாது. இதை அனைவரும் நினைவில் வைத்திருக்க வேண்டும். ஜாஸ் லிட்டில் பதிலாக சுழற் பந்துவீச்சாளர் நூரை, நான் இம்பாக்ட் வீரராக எடுத்ததற்கு காரணம் அவர் நன்றாக பந்து வீசுகிறார் என்பதால் தான். அவரை எதிர்கொள்ள பேட்ஸ்மன்களுக்கு கடினமாக இருக்கும்.

GT Captain Hardik pandya criticize his players for loosing the grip after fantastic start

இன்றைய ஆட்டத்தில் நூர் ரன்களை கொடுத்திருக்கலாம். இதற்காக நான் அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைக்க விரும்பவில்லை. எங்களுக்கு முக்கிய விக்கெட்டுகளை நூர் எடுத்துக் கொடுத்தார். இதை தான் அவரிடமிருந்து நான் எதிர்பார்த்தேன். எங்களுடைய மற்ற பந்துவீச்சாளர்கள் திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை. இது மிகப்பெரிய நெடுந்தொடர். நாம் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் அணியாக இருந்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும் என்பதை இந்த தோல்வி எங்களுக்கு உணர்த்துகிறது.

இன்னும் எங்களுக்கு நிறைய ஆட்டங்கள் எஞ்சி இருக்கிறது. நாங்கள் இன்னும் நிறைய நல்ல கிரிக்கெட்டுகளை விளையாடுவோம். நான் முதல் பாதி முடிந்த பிறகு 10 ரன்கள் குறைவாக அடித்து விட்டோம் என நினைத்தேன்

எங்களுடைய பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்தில் நன்றாக பந்து வீசினார்கள். ஆனால் இன்னும் கடும் நெருக்கடியை கொடுத்து இருக்க வேண்டும் என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

Story first published: Sunday, April 16, 2023, 23:42 [IST]
Other articles published on Apr 16, 2023
English summary
GT Captain Hardik pandya criticize his players for loosing the grip after fantastic start RR vs GT - ஆரம்பத்தில் விக்கெட் எடுத்ததும் அலட்சியம்? குஜராத் வீரர்களை கண்டித்த ஹர்திக் பாண்டியா !
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+