For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி 2 ஓவரில் 14 ரன்கள்.. மிரட்டல் யார்க்கரால் பும்ரா செய்த மேஜிக்.. சொந்த மண்ணில் திணறிய குஜராத்!

அகமதாபாத் : குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றிபெற 169 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் 5வது லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து மும்பை அணி களமிறங்கி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் குஜராத் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில்லும், மும்பை அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் களமிறங்கினர். இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

GT vs MI News in Tamil Gujarat set a target of 169 runs for Mumbai to win at Ahmedabad in the IPL 2024


இதையடுத்து குஜராத் அணி தரப்பில் சாஹா - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. மும்பை அணி தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகளை விளாசி குஜராத் அணி அதிரடியாக தொடங்கியது. மீண்டும் ஹர்திக் பாண்டியா வீசிய 3வது ஓவரில் 2 பவுண்டரிகள் அடிக்கப்பட்டது. இந்த நிலையில் 4வது ஓவரை வீசிய பும்ரா பந்தில், சாஹா 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் 5வது ஓவரை அறிமுக வீரர் முலானி வீசிய நிலையில், சுப்மன் கில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்து கியரை மாற்றினார். இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 47 ரன்கள் சேர்த்திருந்தது. பின்னர் சாவ்லாவை அட்டாக் செய்ய முனைந்து கேப்டன் சுப்மன் கில் 22 பந்துகளில் 31 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் சாய் சுதர்சன் - ஒம்ரசாய் கூட்டணி இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 10வது ஓவருக்கு பின் இருவருமே அட்டாக்கை தொடங்கினார்கள்.

சாவ்லா வீசிய 11வது ஓவரில் இருவரும் ஒரு சிக்ஸ் அடித்து அசத்த, கோட்ஸி வீசிய அடுத்த ஓவரில் ஒமர்சாய் 17 ரன்களில் வெளியேறினார். இதனால் குஜராத் அணியின் ரன் குவிப்பு மும்பை அணியின் கட்டுக்குள் வந்தது. 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ரன்களை மட்டுமே குஜராத் அணி சேர்த்திருந்தது. தொடர்ந்து பும்ரா வீசிய 17வது ஓவரில் முல்லர் 12 ரன்களிலும், சாய் சுதர்சன் 45 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். இதையடுத்து தான் அபாயகர வீரரான ராகுல் டிவாட்டியா களமிறங்கினார்.

லுக் வுட் வீசிய 18வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 19 ரன்களை ராகுல் டிவாட்டியா விளாசினார். தொடர்ந்து பும்ரா வீசிய 19வது ஓவரில் 7 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. இதன்பின் கடைசி ஓவரை வீச கோட்ஸி அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே ராகுல் டிவாட்டியா 22 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் 7 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. இறுதியாக குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது.

Story first published: Sunday, March 24, 2024, 21:24 [IST]
Other articles published on Mar 24, 2024
English summary
GT vs MI News in Tamil : Gujarat set a target of 169 runs for Mumbai to win at Ahmedabad in the IPL 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+