Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 ஆயிரம் ரன்கள்.. சச்சின் சாதனையை முறியடித்த தமிழக சிங்கம்.. 2 மெகா ரெக்கார்ட் செய்த சாய் சுதர்சன்!

அகமதாபாத்: டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களை விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை தமிழக வீரர் சாய் சுதர்சன் படைத்துள்ளார். 54 இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களை கடந்ததன் மூலமாக, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சாய் சுதர்சன் முறியடித்துள்ளார். இதனால் சாய் சுதர்சனை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ஐபிஎல் தொடரின் 51வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் குஜராத் அணி தரப்பில் சுப்மன் கில் - சாய் சுதர்சன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ஐதராபாத் அணி தரப்பில் முகமது ஷமி முதல் ஓவரை வீசினார்.

GT vs SRH Sai Sudharsan broke Sachin Tendulkar Fastest 2 000 Runs Record in T20 Cricket in just 54 innings

முதல் ஓவரிலேயே சுப்மன் கில் சிக்ஸ் அடித்து தொடங்கி வைத்தார். இதன்பின் உனாத்கட் வீசிய 2வது ஓவரில் அடக்கி வாசிக்க, 3வது ஓவரை வீச மீண்டும் முகமது ஷமி வந்தார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே சாய் சுதர்சன் பவுண்டரி அடிக்க, இதன்பின் 2வது பந்து டாட் பாலாக மாறியது. தொடர்ந்து அடுத்தடுத்து 4 பவுண்டரிகளை சாய் சுதர்சன் விளாச, அந்த ஓவரில் மட்டும் 20 ரன்களை குவிக்கப்பட்டது.

தொடர்ந்து பேட் கம்மின்ஸ் வீசிய 4வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 17 ரன்கள் சேர்க்கப்பட, ஹர்சல் படேல் வீசிய 5வது ஓவரிலும் சாய் சுதர்சன் 4 பவுண்டரிகளை விளாசி தள்ளினார். சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 23 பந்துகளில் 48 ரன்களை விளாசி ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த போட்டியில் 44 ரன்களை எட்டிய போது, சாய் சுதர்சன் இந்த சீசனில் 500 ரன்களை கடந்து அசத்தினார்.

அதேபோல் இன்னிங்ஸில் தமிழக வீரர் சாய் சுதர்சன் புதிய சாதனையை படைத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 2 ஆயிரம் ரன்களை குறைந்த இன்னிங்ஸில் விளாசிய வீரர் என்ற சாதனையை சாய் சுதர்சன் படைத்துள்ளார். இதுவரை 59 போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 2 ஆயிரம் ரன்களை கடந்ததே சாதனையாக இருந்து வந்தது.

இந்த சாதனையை 54 இன்னிங்ஸ்களில் சாய் சுதர்சன் முறியடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒரு போட்டியில் கூட டக் அவுட்டாகாமல் இந்த சாதனையை படைத்த முதல் வீரர் என்ற பெருமையையும் சாய் சுதர்சன் பெற்றுள்ளார். அதேபோல் ஐபிஎல் கிரிக்கெட்டில் விரைவாக 1,500 ரன்களை விளாசிய வீரர் என்ற பெருமையை சாய் சுதர்சன் பெற்றுள்ளார்.

இதுவரை ஐபிஎல் வரலாற்றில் 1,500 ரன்களை விரைவாக குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் இருந்தனர். இருவருமே 44 இன்னிங்ஸ்களில் 1,500 ரன்களை குவித்தனர். இந்த சாதனையை சாய் சுதர்சன் 35 ரன்களிலேயே விளாசி புதிய வரலாறு படைத்துள்ளார். இதனால் தமிழக வீரர் சாய் சுதர்சனை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Story first published: Friday, May 2, 2025, 20:23 [IST]
Other articles published on May 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+