பெங்களூரு : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர்சிபி அணி வாழ்வா சாவா என்ற முக்கிய கட்டத்தில், தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத்தை எதிர்கொள்கிறது. பெங்களூருவில் மழை பெய்து வந்ததால் டாஸ் 45 நிமிடம் தாமதமாக வீசப்பட்டடது.
மீண்டும் மழை குறுக்கிட்டால், ஆட்டம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இது குஜராத் அணிக்கு பெரும் சாதகமாக பார்க்கப்படுகிறது. டக் வொர்த் லூயிஸ் விதி கூட இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கே சாதகமாக இருக்கும்

இந்த நிலையில், நாளை மறுநாள் முதல் குவாலிபையர் போட்டியில் சென்னை அணியுடன் குஜராத் விளையாட உள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹர்திக் பாண்டியா பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
இதனால் ஆர்சிபி அணிக்கு பாதகமாக கருதப்படுகிறது. இது குறித்து பேசிய ஹர்திக், குவாலியையர் நாளை மறுநாள் நடைபெறுவதால், நாங்கள் நல்ல மன உத்வேகத்துடன் இருக்க வேண்டும். இதனால் நாங்கள் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய டுபிளசிஸ்,இன்றைய ஆட்டத்தில் கரன் சர்மாவுக்கு பதில் ஹிமான்சு சர்மாவை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். தற்போது டாஸ் போடப்பட்டு பிறகு மழை வந்ததால், ஆட்டம் மீண்டும் நிறுத்தப்பட்டது. இதனால் இன்று மழை கண்ணாமூச்சி காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 10.55 வரை ஆட்டம் தொடங்கினால், 5 ஓவர்களாக நடத்தப்படும். இல்லையேனில் ஆட்டம் ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். இதன் மூலம் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு சென்றுவிடும்.