Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2023.. அமர்க்களமாக தொடங்கிய ஹர்திக் பாண்டியா.. டாஸ் வென்ற பின் என்ன சொன்னார்?

அகமதாபாத்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

16வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா அகமதாபாத் மைதானத்தில் பிரம்மாண்ட தொடக்க விழாவுடன் தொடங்கியது. பிரபல தொகுப்பாளர் மந்திரா பேடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பாடகர் அர்ஜித் சிங் பல்வேறு பிரபல பாடல்களை பாடி ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுத்தார்.

Gujarat Captain Hardik Pandya won the Toss and chose to field against Chennai in IPL 2023

இதனைத் தொடர்ந்து தொடக்க நிகழ்ச்சியில் நடிகைகள் ராஷ்மிகா மந்தனா மற்றும் தமன்னா ஆகியோர் நடனமாடினர். இதில் ராஷ்மிகாவின் நடனம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் தென்னிந்திய பாடல்களுக்கு நடனமாடி தமன்னாவும் கவனத்தை ஈர்த்தார்.

இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்க ஐபிஎல் போட்டி தொடங்கியது. நடப்பு சாம்பியன் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி இருவரும் டாஸ் போடுவதற்காக மைதானத்தில் களமிறங்கினர். இருவரும் மைதானத்தில் கால் பதித்த போது ரசிகர்களின் சத்தம் விண்ணை தொட்டது.

இதனைத் தொடர்ந்து டாஸ் போடப்பட்டது. அதில் குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று, பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அகமதாபாத் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்பவர்களே அதிக முறை வென்றிருந்தாலும், ஹர்திக் தைரியமாக சேஸிங்கை எடுத்துள்ளார். இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சென்னை அணியில் இளம் வீரர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் முதல்முறையாக இடம்பிடித்துள்ளார். அதேபோல் குஜராத் அணியில் அயர்லாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஜோஷ்வா லிட்டில் இடம்பெற்றுள்ளார். அதேபோல் கடந்த ஆண்டு ஃபார்மின்றி தவித்துவந்த விஜய் சங்கருக்கும் குஜராத் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Gujarat Captain Hardik Pandya won the Toss and chose to field against Chennai in IPL 2023

சென்னை அணி விவரம்: டெவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பாதி ராயுடு, ஷிவம் தூபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி, மிட்செல் சாண்டனர், தீபக் சஹர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்

இம்பேக்ட் பிளேயர்: துஷார் தேஷ்பாண்டே, சேனாபதி, ஷேக் ரஷீத், ரஹானே, நிஷாந்த் சிந்து

Gujarat Captain Hardik Pandya won the Toss and chose to field against Chennai in IPL 2023

குஜராத் அணி விவரம்: விருத்திமான் சாஹா, சுப்மன் கில், கேன் வில்லியம்சன், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், ராகுல் டிவாட்டியா, ரஷீத் கான், முகமது ஷமி, ஜோஷ்வா லிட்டில், யாஷ் தயாள், அல்ஜாரி ஜோசப்

இம்பேக் பிளேயர்: கே.எஸ்.பரத், சாய் சுதர்சன், ஜெயந்த் யாதவ், மோகித் சர்மா, அபினவ் மனோகர்

Story first published: Friday, March 31, 2023, 19:16 [IST]
Other articles published on Mar 31, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+