For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் இறுதிப்போட்டி.. அன்னிக்கு பிஸ்லா, இன்னிக்கு சாஹா.. விக்கெட் கீப்பர்களிடம் சிக்கும் சிஎஸ்கே!

அகமதாபாத்: 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் கேகேஆர் அணியின் விக்கெட் கீப்பரான பிஸ்லா எப்படி சென்னை அணிக்கு எமனாக அமைந்தாரோ, அதேபோன்ற ஒரு ஆட்டத்தை குஜராத் அணியின் விக்கெட் கீப்பரான சாஹா ஆடி சென்றுள்ளார்.

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் - சென்னை அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்எஸ் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டு ஆட்டம் தொடங்கியது. இதன் பின்னர் குஜராத் அணி தரப்பில் சுப்மன் கில் - சாஹா தொடக்கம் கொடுத்தனர்.

Gujarat Titans Opener Saha gave the same vibe of KKR former Cricket Bisla against CSK in the IPL 2023 finals

இதில் 2வது ஓவரின் போது சுப்மன் கில் 3 ரன்கள் எடுத்திருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை தீபக் சஹர் தவறவிட்டார். அதேபோல் தீபக் சஹர் பந்துவீச்சில் அவரிடமே கொடுத்த கேட்சையும் தவறவிட்டார். இதனை பயன்படுத்தி அதிரடியாக ஆடிய இருவரும் பவர் பிளே ஓவர்கள் முடிவில் 62 ரன்களை சேர்த்தனர். இந்த நிலையில் சுப்மன் கில் 39 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டத்தை சாஹா கையில் எடுத்தார்.

அதிரடியாக ஆடிய இவர், 35 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதனால் இதேபோன்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பரான பிஸ்லா ஆட்டத்தை மாற்றிக் காட்டினார். அதுபோல் சாஹாவின் சென்னை அணியிடம் இருந்து ஆட்டத்தை கொஞ்சம் கொஞ்சம் குஜராத் அணி பக்கம் திருப்பினார். இந்த நிலையில் சிறப்பாக ஆடிய சாஹா 39 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2014ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில் சதம் விளாசிய சாஹா, இந்த இறுதிப்போட்டியில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, May 29, 2023, 21:01 [IST]
Other articles published on May 29, 2023
English summary
GT vs CSK: Gujarat Player Saha scored a half century of 35 Balls against CSK in the IPL 2023 Finals. He gave the same vibe of Bisla who played a match winning knock against CSK in IPL 2012 Final
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+