சுப்மன் கில், விஜய் சங்கருக்கு வடை போச்சு..நடுவரிடம் சண்டை போட்டது எல்லாம் வேஸ்ட்? அநியாயமா இருக்கு
அகமதாபாத் : ஐபிஎல் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பங்சம் இல்லாமல் சென்று கொண்டு இருந்தது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 178 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து. இதில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 92 ரன்கள் எடுத்தார்.
ஆனால் மற்ற சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் யாரும் துணை நின்று விளையாடவில்லை. இதனையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர் சாஹா 16 பந்தில் 25 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். வில்லியம்சனுக்கு காயம் காரணமாக, சாய் சுதர்சன் இம்பேக்ட் வீரர்க களமிறகினார்.

17 பந்தில் 22 ரன்கள் சேர்தத சாய் சுதர்சன், ஹங்கர்கேகர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா 8 ரன்களில் வெளியேறினார். இதனால் சுப்மன் கில் தனி ஆளாக நின்று அதிரடியாக விளையாடினார். ஆட்டத்தின் 13.6வது ஓவரில் ஹங்கர்கேகர் வீசிய பந்து உயரமாக சென்றதாக கூறி, சுப்மன் கில் நடுவரிடம் ரிவியூ கேட்டு முறையிட்டார்.
இதனையடுத்து, அதன் ரீப்ளேவை பார்த்த நடுவர், பேட்ஸ்மேன்களின் தோள்பட்டை உயரத்திற்கு கீழ் தான் பந்து சென்றதாக கூறி, நா பால் தர மறத்தார். இதனால் ஒரு ரிவியூ வீணானது. இதே போன்று ஆட்டத்தின் 18வது ஓவரில் விஜய் சங்கர் பேட்டிங் செய்ய ஹங்கர்கேகர் அகல பந்தாக வீசினார்.
ஆனால் அதற்கு நடுவர் WIDE தரவில்லை. இதனையடுத்து மீண்டும் ரீவியூவை குஜராத் பயன்படுத்தியது. ஆனால், பேட்ஸ்மேன் இடது பக்கம் நகர்ந்து சென்றதால் இதற்கு ஓயிடு கிடையாது என நடுவர் அறிவிக்க, ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு, டிஆர்எஸ் ஐ வீணடித்தார்கள்.


Click it and Unblock the Notifications