For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"ரியல் கடப்பாரை டீம்யா இது" பிளே ஆஃப் சுற்றில் குஜராத் அணி.. ஐதராபாத் அணிக்கு முடிவுகட்டிய ஹர்திக்!

அகமதாபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற குஜராத் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கும் தகுதிபெற்று அசத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 62வது லீக் போட்டியில் குஜராத் அணியை எதித்து ஐதராபாத் அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 101 ரன்கள் விளாசினார். அதேபோல் ஐதராபாத் அணி சார்பாக புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

Gujarat Titans won by 34 Runs against Hyderabad and Qualified for Playoffs in IPL 2023

இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் அன்மோல்ப்ரீத் சிங் முதல் ஓவரிலேயே 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இரண்டாவது ஓவரில் அபிஷேக் சர்மா 4 ரன்களிலும், மூன்றாவது ஓவரில் ராகுல் த்ரிப்பாட்டி 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து 5வது ஓவரில் கேப்டன் மார்க்ரம் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து வந்த வீரர்களாவது விக்கெட்டை கொடுக்காமல் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மோகித் சர்மா வீசிய 7வது ஓவரில் சன்விர் சிங் 7 ரன்களும், அப்துல் சமத் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து கண்மூடி திறப்பதற்கு ஐதராபாத் அணி 9 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 59 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. இதன் காரணமாக குஜராத் அணி வெற்றி நிச்சயம் என்று பார்க்கப்பட்டது.

Gujarat Titans won by 34 Runs against Hyderabad and Qualified for Playoffs in IPL 2023

ஆனால் ஐதராபாத் அணியின் கிளாஸன் - புவனேஷ்வர் குமார் இணை நிதானமாக ஆடியது. கிளாஸன் மட்டும் அவ்வப்போது சில சிக்சர்களையும், பவுண்டரிகளையும் விளாசினார். சிறப்பாக ஆடிய கிளாஸன் 35 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இதையடுத்து 16 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 123 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால் கடைசி 24 பந்துகளில் ஐதராபாத் அணி வெற்றிபெற 66 ரன்கள் தேவைப்பட்டது.

இந்த நிலையில் கிளாஸனும் 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஐதராபாத் அணியின் வெற்றிக் கனவு முடிவுக்கு வந்தது. இதன்பின்னர் புவனேஷ்வர் குமார் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் குஜராத் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதோடு, பிளே ஆஃப் சுற்றுக்கும் முதல் அணியாக தகுதிபெற்று அசத்தியுள்ளது. முகமது ஷமி மற்றும் மோகித் சர்மா இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, May 15, 2023, 23:36 [IST]
Other articles published on May 15, 2023
English summary
GT vs SRH: Gujarat won by 34 Runs against SRH at Ahmedabad. Also Gujarat is the first team to qualify for the playoffs in IPL 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+