Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"செஞ்சதே போதும் சாமி" யாஷ் தயாளை நீக்கிய குஜராத்.. தவானை வீழ்த்த புது வியூகம்.. குஜராத் பந்துவீச்சு!

மொஹாலி: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

16வது ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடுகிறது. கடந்த போட்டியில் கற்பனை செய்ய முடியாத தோல்வியடைந்த குஜராத் அணியும், ஐதராபாத் அணியிடம் வீழ்ந்த பஞ்சாப் அணியும் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப போட்டியிடுவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Gujarat Titans won the toss and chose to filed against Punjab in IPL 2023

இந்த நிலையில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். மொஹாலி மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணியின் சராசரி ஸ்கோரே 186 ரன்கள் என்பதால், சேஸிங் செய்யும் அணி வெற்றிபெறவே அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

அதேபோல் குஜராத் அணி சார்பாக அனுபவ வீரர் மோகித் சர்மா அறிமுகமாகி உள்ளார். ஃபார்மில் உள்ள ஷிகர் தவானை வீழ்த்த குஜராத் அணியின் வியூகமாகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஷிகர் தவானை மட்டும் 10 ஆட்டங்களில் மோகித் சர்மா விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். மோகித் சர்மா அணியில் சேர்க்கப்பட்டு, கடந்த போட்டியில் ரிங்கு சிங் 5 சிக்சர்களை விளாசிய ஓவரை வீசிய யாஷ் தயாள் நீக்கப்பட்டுள்ளார்.

குஜராத் அணி விவரம்: விருத்திமான் சாஹா, சுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் டிவாட்டியா, அல்ஜாரி ஜோசப், முகமது ஷமி, மோகித் சர்மா, ஜோஸ் லிட்டில்

பஞ்சாப் அணி விவரம்: பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான், மேத்யூ ஷார்ட், ராஜபக்சே, ஜித்தேஷ் சர்மா, சாம் கரண், ஷாரூக் கான், ஹர்பிரீத் பரார், ரபாடா, ரிஷி தவான், அர்ஷ்தீப் சிங்

Story first published: Thursday, April 13, 2023, 19:13 [IST]
Other articles published on Apr 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+