Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

GT vs KKR: ஹர்திக் பாண்டியாவுக்கு காயமா? கேப்டனாக வந்த ரஷீத் கான்.. டாசிலும் நடந்த ட்விஸ்ட்!

அகமதாபாத்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ரஷீத் கான் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

16வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் உடல்நிலை சரியில்லாததால் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக குஜராத் அணியின் தலைமை பொறுப்பை ரஷீத் கான் ஏற்றுள்ளார்.

Gujarat won the toss and chose to Bat against KKR in IPL 2023

இதில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ரஷீத் கான் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். குஜராத் அணியில் ஹர்திக் பாண்டியா விளையாடாததால், அவருக்கு பதிலாக விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்வதால், ஜோஷ் லிட்டில் நீக்கப்பட்டு பிளேயிங் லெவனில் அபினவ் மனோகர் இடம்பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் குஜராத் அணி களமிறங்கியுள்ளது.

இதனால் இம்பேக்ட் பிளேயராக வெளிநாட்டு பந்துவீச்சாளர் களமிறங்க வாய்ப்புள்ளது. மறுபக்கம் கேகேஆர் அணி தரப்பில் டிம் சவுதி மற்றும் மன்தீப் சிங் நீக்கப்பட்டு தமிழ்நாடு வீரர் ஜெகதீசன் மற்றும் அதிவேக பந்துவீச்சாளர் ஃபெர்குசனை அணியில் சேர்த்துள்ளது. இதனால் கொல்கத்தா அணியின் பலம் கூடியுள்ளது. அகமதாபாத் மைதானம் முதலில் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கும் என்பதால், அந்த அணியின் பேட்டிங் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

குஜராத் அணி விவரம்: சுப்மன் கில், விருத்திமான் சாஹா, சாய் சுதர்சன், விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் டிவாட்டியா, ரஷீத் கான், அபினவ் மனோகர், முகமது ஷமி, அல்ஜாரி ஜோசப், யாஷ் தயாள்

கொல்கத்தா அணி விவரம்: குர்பாஸ், ஜெகதீசன், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாகூர், சுயாஸ் சர்மா, ஃபெர்குசன், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி

Story first published: Sunday, April 9, 2023, 15:22 [IST]
Other articles published on Apr 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+