பாண்ட்யாவின் துணிச்சல் ரோகித்-க்கு இருக்குமா? கவுகாத்தி பிட்ச்-ல் உள்ள ஆப்பு.. முதல் ODIல் என்னாகும்
கவுகாத்தி: இலங்கை அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்ட்யா எடுத்த அதே ரிஸ்கை கேப்டன் ரோகித் சர்மாவும் எடுத்து பார்ப்பாரா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இன்று கவுகாத்தியில் நடைபெறவுள்ளது. பர்ஸபரா கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்கும்.
இதற்கு முன்பு நடைபெற்ற டி20 தொடரை ஹர்திக் பாண்ட்யாவின் தலைமையில் 2 -1 என இந்தியா வென்றது. இதே போல ரோகித் சர்மாவும் ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றுக்கொடுப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

திடீர் குழப்பம்
இந்நிலையில் போட்டிகளில் ஹர்திக் செய்த விஷயங்களை ரோகித்தும் செய்வாரா? என்ற கேள்வி தான் பலரிடமும் உள்ளது. அதாவது டி20 தொடரில் எதெல்லாம் சாதகமான முடிவுகளோ, அதையெல்லாம் விட்டுவிட்டு நேர்மறையான முடிவுகளை பாண்ட்யா எடுத்தார். 3 போட்டிகளிலுமே டாஸில் மாறுபட்ட முடிவு எடுத்தார். கடைசி ஓவரை அக்ஷரிடம் கொடுத்தார். வீரர்களை இக்கட்டான சூழலில் தள்ளி பழக்கப்படுத்த போகிறேன் என வெளிப்படுத்தப்போகிறது. இதனை ரோகித்தும் செய்வாரா என்பது பிட்ச்- ரிப்போர்ட்டை பார்த்தால் தான் புரிந்துக்கொள்ள முடியும்.

பிட்ச் ரிப்போர்ட்
போட்டி நடைபெறும் பர்ஸபரா மைதானம் பேட்டிங்கிற்கு சொர்க்கம் என்று தான் கூற வேண்டும். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பேட்ஸ்மேன்களால் பவுண்டரி மழை பொழிய முடியும். இதே மைதானத்தில் தான் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்திய அணி 42.1 ஓவர்களில் 326 ரன்களை குவித்தது. பவுலர்களால் ஒன்றுமே செய்ய முடியாதா என்று கேட்டால் முதல் இன்னிங்ஸில் முடியும்.

டாஸில் என்ன செய்யனும்?
டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்வது தான் நல்லது. ஏனென்றால் இங்கு வழக்கத்தை விட வெகு சீக்கிரமாக பனிப்பொழிவு இருக்கும். நேரம் போக போக அதிகமாகும். இதனால் 2வதாக பந்துவீசும் அணிக்கு சிரமம் ஏற்படும். பந்துவீச்சை தேர்வு செய்த அணி தான் இங்கு வெற்றிகளை பெற்றுள்ளன. ரோகித் சர்மா இதனையெல்லாம் உடைத்து ரிஸ்க்-ஆன முடிவை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

2 பேருக்கு வாய்ப்பு
இந்த மைதானத்தில் ரோகித் சர்மா மற்றும் யுவேந்திர சாஹல் கைதேர்ந்தவர்கள். ஏனென்றால் 2018ல் சேஸிங்கின் போது ரோகித் சர்மா 152* ரன்களை விளாசி ஆச்சரியம் தந்தார். இதே போல பேட்டிங்கிற்கு சாதகமான களத்தில் யுவேந்திர சாஹல் 41 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றியிருந்தனர். இவர்கள் இருவரும் இன்று ஜொலிப்பார்கள் எனத்தெரிகிறது.


Click it and Unblock the Notifications