கிளவுஸை எறிந்துவிட்டு.. வலியில் துடித்த விஹாரி.. ஓட கூட முடியவில்லை.. இந்திய அணிக்கு என்னாச்சு?
சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ஹனுமா விஹாரி காயம் அடைந்து துடித்த சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. தொடக்கத்தில் வெற்றியை நோக்கி இந்தியா சென்று கொண்டு இருந்தது.
ஆனால் தற்போது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறி வருகிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக எப்படியாவது டிரா செய்யும் நோக்கத்தோடு தற்போது இந்திய அணி ஆடி வருகிறது.

மோசம்
இந்திய அணியில் ஏற்கனவே பண்ட், ஜடேஜா ஆகியோர் காயம் அடைந்துள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ஹனுமா விஹாரி காயம் அடைந்து துடித்த சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது. இந்திய அணியின் பண்ட் அவுட்டான பின் ஹனுமா விஹாரி களமிறங்கினார்.

பொறுமை
ஹனுமா விஹாரி களமிறங்கியதில் இருந்தே மிகவும் பொறுமையாக ஆடினார். 30 பந்துகளுக்கு 3 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் ஹனுமா விஹாரி ரன்னிங் ஓடும் போது திடீரென தசை பிடிப்பு ஏற்பட்டு கீழே சுருண்டு விழுந்தார்.

தொடை
இவரின் தொடையில் தசை பிடிப்பு ஏற்பட்டு மொத்தமாக கீழே சுருண்டு விழுந்தார். கையில் இருந்த கிளவுஸை தூக்கி எறிந்துவிட்டு வலியில் துடிக்க தொடங்கினார். விஹாரி இப்படி கீழே விழுந்து துடித்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

மருத்துவ குழு
இவருக்கு காலில் ஹாம்ஸ்ட்ரிங் காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இதன் பின் தொடர்ந்து ஆடிய விஹாரி ஓட முடியாமல் கஷ்டப்பட்டு ஓடினார். இந்த தசை பிடிப்பு காரணமாக அடுத்த போட்டியில் விஹாரி ஆடுவது சந்தேகம் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications