Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“விராட் கோலிக்கு மகிழ்ச்சி செய்தி”.. மகள் வாமிகா-வால் வந்த பெருமை.. கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்!

மும்பை: சோகத்தில் மூழ்கியிருக்கும் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு, அவரின் மகளால் மகிழ்ச்சி செய்தி ஒன்று வந்துள்ளது.

விராட் கோலிக்கு கடந்த சில மாதங்களாகவே கிரிக்கெட்டில் சற்று சறுக்கலான நாட்களாக இருந்து வருகிறது.

டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியது, இந்திய டி20 கேப்டன் பதவி விலகல் என பின்னடைவை சந்தித்தார்.

சோகத்தில் கோலி

சோகத்தில் கோலி

இதற்கெல்லாம் மேலாக தற்போது இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியும் விராட் கோலியிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ரோகித் சர்மாவை புதிய கேப்டனாக பிசிசிஐ நியமித்துள்ளது. விராட் கோலிக்கு விருப்பமே இல்லை என்றாலும், கட்டாயப்படுத்தி பிசிசிஐ இந்த முடிவை எடுத்திருப்பதால் அவர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

மகிழ்ச்சி தந்த செய்தி

மகிழ்ச்சி தந்த செய்தி

இந்நிலையில் இந்த பிரச்னைகளுக்கு இடையேயும் விராட் கோலிக்கு, அவரின் மகள் வாமிகாவால் மகிழ்ச்சி செய்தி ஒன்று கிடைத்துள்ளது. விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதிக்கு இந்தாண்டு ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்த விராட் கோலி, அனுஷ்காவின் பிரசவத்திற்காக உடனடியாக பாதியில் இந்தியா திரும்பினார். எனினும் தற்போது மகளின் முகத்தை இதுவரை வெளியுலகிற்கே காட்டாமல் உள்ளனர்.

ட்விட்டர் நிறுவனம் அறிவிப்பு

ட்விட்டர் நிறுவனம் அறிவிப்பு

இப்படி குழந்தையின் முகத்தை காட்டாமல் வெளியிட்ட புகைப்படம் தான் கோலியின் மகிழ்ச்சி செய்திக்கு காரணம். ஆம், விராட் கோலி, தனக்கு மகள் பிறந்திருப்பதாக அறிவித்த ட்விட்டர் பதிவு தான், 2021ம் ஆண்டு இந்தியாவில் அதிக பேரால் லைக் செய்யப்பட்ட ட்வீட் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதனை ட்விட்டர் நிறுவனமே அறிவித்துள்ளது.

Recommended Video

சதம் அடித்தால் மட்டும் போதாது.. Cup முக்கியம்.. Captaincy குறித்து Rohit கருத்து
பிரபலமாக காரணம்?

பிரபலமாக காரணம்?

அந்த ட்வீட்டில் அவர், எங்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களின் அன்பு மற்றும் பிரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி. அனுஷ்கா மற்றும் குழந்தை இருவருமே மிகவும் ஆரோகியத்துடன் உள்ளனர். உங்களின் ஆசியோடு நாங்கள் வாழ்க்கையின் புதிய கட்டத்தை தொடங்கவுள்ளோம் எனக்குறிப்பிட்டிருந்தார். இதற்கு அப்போது சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் என பலரும் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, December 9, 2021, 23:23 [IST]
Other articles published on Dec 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+