Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியும், ரோகித்தும் இனி எத்தனை வருடம் இந்திய அணிக்காக விளையாடுவார்கள்.. ஹர்பஜன் சிங் கணிப்பு

மும்பை : இந்திய கிரிக்கெட் அணி தற்போது புதிய அத்தியாயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.டி20 கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே விராட் கோலி,ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில் இன்னும் இந்த இரண்டு ஜாம்பவான்களும் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார்கள் என தெரியவில்லை.

இந்த நிலையில் இது குறித்து ஹர்பஜன் சிங்கிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஹர்பஜன்சிங், ரோகித் சர்மாவை பொறுத்தவரை அவர் இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார் என்று நினைக்கிறேன். ஆனால் விராட் கோலியின் உடல் தகுதியை பார்த்தால் குறைந்தபட்சம் அவர் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவார்.

cricket rohit sharma Virat kohli

இந்திய கிரிக்கெட் அணியில் இருக்கும் முழு உடல் தகுதி உள்ளிட்ட வீரராக விராட் கோலி மட்டுமே பெற்றுக் கொள்கிறார். ஒரு 19 வயது கிரிக்கெட் வீரர்களிடம் சென்று விராட் கோலி உடன் போட்டி போடுங்கள் என்று கூறுங்கள். நிச்சயம், விராட் கோலி தான் வெற்றி பெறுவார்.அந்த அளவுக்கு உடல் தகுதியுடன் விராட் கோலி இருக்கிறார்.

என்னை பொறுத்தவரை விராட் கோலிக்கும், ரோஹித் சர்மாவுக்கும் இன்னும் நிறைய கிரிக்கெட் அவர்களுக்குள் எஞ்சி இருக்கிறது. ஆனால் இதை முழுக்க முழுக்க அவர்கள் மட்டும்தான் முடிவு எடுக்க வேண்டும். இருவரும் உடல் தகுதியுடன் இருந்து அணிக்காக சிறப்பாக பங்காற்றினார்.நிச்சயம் இருவரும் கண்டிப்பாக இந்திய அணிக்காக தொடர வேண்டும்.டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் பங்கு மிகவும் முக்கியம்.

டி20 ஒருநாள் டெஸ்ட் என அனைத்து விதமான கிரிக்கெட்டிலுமே உங்களுக்கு அனுபவம் என்பது மிகவும் தேவை. அனுபவ வீரர்கள் அணியில் இருக்கும் போது அவர்கள் அடுத்து வரும் இளம் வீரர்களை மெருகேற்றுவார்கள். இந்திய அணிக்கு தங்களால் எந்த ஒரு பங்களிப்பும் செய்ய முடியாது என்று ஒரு நிலை வந்தாலும், இல்லை எனக்கு உடல் தகுதி போதுமான அளவு இல்லை என்ற நிலை வந்தாலோ ரன்கள் அடிக்க முடியவில்லை என தெரிந்தாலோ நிச்சயம் இந்த சீனியர் வீரர்கள் இளம் வீரர்களுக்கு வழி விட வேண்டும்.

என்னை பொறுத்தவரை சீனியர் வீரர்களை விட இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற அதிக உத்வேகத்தில் இருக்கிறார்கள். தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் போது உங்களுக்கு கொஞ்சம் உத்வேகம் குறையும். இந்த தருணத்தில் ரியான் பராக், ஜெய்ஸ்வால், கில் போன்ற வீரர்கள் எல்லாம் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, August 12, 2024, 22:38 [IST]
Other articles published on Aug 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+