For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காற்று மாசு.. கூட்டம் போட்டு ஆலோசனை பண்ணுங்க.. மோடி, முதல்வர்களுக்கு ஹர்பஜன் கோரிக்கை

Recommended Video

Harbhajan requests Modi on delhi pollution | மோடி, முதல்வர்களுக்கு ஹர்பஜன் கோரிக்கை

பெங்களூரு : சமீப காலங்களில் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் காற்று மாசுப்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி மற்றும் வடமாநில முதலமைச்சர்கள் கூட்டம் போட்டு ஆலோசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் பிரதமர் மோடி, இந்த விவகாரத்தில் முக்கிய கவனம் செலுத்தி இந்திய மக்கள் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் தனிப்பட்ட முறையில் கோரிக்கை வைத்துள்ளார்.

டிவிட்டரில் வீடியோ பதிவு

டிவிட்டரில் வீடியோ பதிவு

டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் அச்சுறுத்திவரும் காற்று மாசுப்பாட்டை நீக்க மோடி மற்றும் டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில முதலமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

பள்ளிகள் மூடல்

பள்ளிகள் மூடல்

தீபாவளி கொண்டாட்டத்தை அடுத்துவந்த நாட்களில் டெல்லியில் அதிகப்படியான காற்று மாசு ஏற்பட்டது. சில பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமான அளவிற்கு குறைந்தது. இதையடுத்து அங்கு பள்ளிகள் மூடப்பட்டன.

மோடிக்கு வேண்டுகோள்

மோடிக்கு வேண்டுகோள்

இதனிடையே, மக்களின் நலனை கவனத்தில் கொண்டு இந்த காற்று மாசை குறைக்க மோடியுடன் அமரிந்தர் சிங், அரவிந்த் கெஜ்ரிவால், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட முதலமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க கைகோர்க்க வேண்டும் என்றும் இதன்மூலம் சிறந்த இந்தியாவை உருவாக்குவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நானும் ஒருவகையில் காரணம்

நானும் ஒருவகையில் காரணம்

இந்தியாவில் அதிகப்படியான காற்று மாசு ஏற்பட அனைவரும் காரணமாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ள ஹர்பஜன், தானும் ஒருவகையில் இதற்கு காரணமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். அதிகப்படியான எரிபொருளை நாம் பயன்படுத்துவதே இதற்கு காரணம் என்றும் கூறியுள்ளார்.

ஹர்பஜன் கோரிக்கை

ஹர்பஜன் கோரிக்கை

குழந்தைகள் உள்ளிட்டவர்கள் மிக அதிகளவில் காற்று மாசால் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர், விவசாயிகள் உள்ளிட்டவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு பிரதமர் மோடி இதற்கு உடனடி தீர்வு காணவேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆலோசனை சொல்லுங்க

மோடி மற்றும் டெல்லி, பஞ்சாப், ஹரியானா மாநில முதலமைச்சர்கள் உடனடியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி பொதுமக்கள் இதை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Story first published: Wednesday, November 6, 2019, 11:39 [IST]
Other articles published on Nov 6, 2019
English summary
Harbajan Singh has urged PM Modi and Northern India CMs to take action on air pollution
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+