Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. இந்திய அணி நிர்வாகம் செய்த தவறு.. ஹர்பஜன் சிங் மறைமுக தாக்கு

மும்பை : ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பிளேயிங் லெவனில் முக்கிய இடத்திற்கு யாரை தேர்வு செய்வது என்ற குழப்பம் ராகுல் டிராவிட் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்திய அணி வீரர்கள் வரும் ஏழாம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுகின்றனர்.

Harbhajan feels Wriddhiman saha should play as wicket keeper in WTC Finals

பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதுவும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி சிறப்பாக விளையாடினால் மட்டுமே ஓரளவுக்காவது தாக்குப் பிடிக்க முடியும். இந்த நிலையில் ரிஷப் பன்ட் இல்லாத சூழலில் கே எல் ராகுலை விக்கெட் கீப்பராக பயன்படுத்தலாம் என அணி நிர்வாகம் யோசித்து வைத்திருந்தது.

ஆனால் அவரும் காயம் காரணமாக வெளியேறிவிட்டார். இதனால் விக்கெட் கீப்பராக கேஸ் பரத் மற்றும் இசான் கிஷன் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் விக்கெட் கீப்பராக யாரை சேர்க்கலாம் என்ற குழப்பம் இந்திய அணி நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன், கேஸ் பரத் தற்போது இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார்.

ஆனால் அவருக்கு போதிய அனுபவம் இல்லை. இதுவே சாகா அணியில் இருந்திருந்தால், அவரை கண்டிப்பாக பிளேயிங் லெவலில் சேர்த்திருக்கலாம். ஏனென்றால் சாகாவுக்கு அதிக அனுபவம் இருக்கிறது. கே எஸ் பரத்தை விட அவர் நன்றாக விக்கெட் கீப்பிங் செய்வார். என்னை பொருத்தவரையில் கேல் ராகுல் உடன் தகுதியுடன் இருந்திருந்தால் நான் கே எல் ராகுல் தான் விக்கெட் கீப்பராக சேர்த்திருப்பேன் என்று ஹர்பஜன் கூறியுள்ளார்.

Harbhajan feels Wriddhiman saha should play as wicket keeper in WTC Finals

2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் தொடரில் சாஹா இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். அதன் பிறகு கே எஸ் பரத்துக்கு தான் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் சாகா 17 போட்டிகளில் விளையாடி 371 ரன்கள் சேர்த்திருக்கிறார். இதனால் தற்போதுள்ள சூழலில் சாஹா தான் சரியான வாய்ப்பாக இருந்திருப்பார். ஆனால் இந்திய அணி நிர்வாகம் இசான் கிஷனுக்கு அந்த வாய்ப்பை கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, June 2, 2023, 13:51 [IST]
Other articles published on Jun 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+