Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"இவர் தான் சரியான ஆளு".. புவனேஸ்வர் குமாரை அணியிலிருந்து நீக்குங்கள்.. ஹர்பஜன் சிங் போட்ட குண்டு

மும்பை : டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து புவனேஸ்வர் குமாரை நீக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

காயம் காரணமாக பும்ரா விலகிய நிலையில் அவருக்கு பதிலாக யாரை தேர்வு செய்யலாம் என்று குழப்பத்தில் பிசிசிஐ உள்ளது.

இந்த நிலையில் ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ள கருத்தில் புவனேஸ்வர் குமாரை ப்ளெயிங் லெவனின் சேர்க்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

19வது ஓவரில் சிக்கல்

19வது ஓவரில் சிக்கல்

புவனேஸ்வர் குமார் அனுபவம் வாய்ந்த வீரர். அவர் பல போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றிகளை தேடி கொடுத்திருக்கிறார். ஆனால் சமீப காலமாக 19வது ஓவரில் அவர் அதிக ரன்களை விட்டுத் தருகிறார். 19 ஆவது ஓவரில் நீங்கள் எட்டில் இருந்து 10 ரன்கள் கொடுத்தால் எந்த பிரச்சினையும் இல்லை.

என் சாய்ஸ் தீபக்

என் சாய்ஸ் தீபக்

ஆனால் 15 ரன்களுக்கு மேல் கொடுத்தால் அது ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும். இதனால் புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக நான் தீபக்சாகரை தான் அணியில் சேர்ப்பேன். தீபக் சாகர் மட்டும்தான் தற்போது இருக்கும் பந்துவீச்சாளர்களில் புதிய பந்தில் நன்றாக ஸ்விங் செய்கிறார். இன்சுவிங், அவுட்சிங் என இரண்டு புறமும் பந்து செல்கிறது. பவர் பிளேவில் தீபக்சாகர் உங்களுக்கு இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகளை பெற்றுத் தருவார்.

நல்ல பேட்ஸ்மேன்

நல்ல பேட்ஸ்மேன்

தீபக்சாகரின் இன்சுவிங்கை பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள சிரமப்படுகின்றனர். மேலும் தீபக்சாகர், புவனேஸ்வர் குமாரை விட திறமை வாய்ந்த வீரராக இருக்கிறார். கீழ் வரிசையில் கூட தீபக்சாகர் உங்களுக்கு ரன்களை சேர்த்து தருவார். ஆர்ஸ்தீப் சிங் ஒரு இளம் வீரர் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.இடது கை வேகப்பந்துவீச்சாளர் என்பதால் இயற்கையாகவே அவர் பந்து வீசும் முறை பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை கொடுக்கும்.

நியாயமாக இருக்காது

நியாயமாக இருக்காது

ஆனால் ஆடுகளத்தில் உதவி இருந்தால் அவரால் இன்னமும் சிறப்பாக பந்து வீச முடியும். இளம் வீரர் ஒருவரை நெருக்கடியான கட்டத்தில் ஆறு பந்துகளை வீச சொல்வது நியாயமாக இருக்காது. ஆனால் அவருக்கு பொறுமையும், திறமையும் இருக்கிறது. ஆர்ஸ்தீப் கூட அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர் ஒருவர் இருந்தால், அது அவருக்கு நன்மையை கொடுக்கும்.பும்ராவுக்கு மாற்று வீரரை வரும் 15ஆம் தேதி பிசிசிஐ அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, October 8, 2022, 6:00 [IST]
Other articles published on Oct 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+