Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த ரோஹித் சர்மா ரசிகர்களோட அலும்பு தாங்க முடியலை! ஹர்பஜனை கோர்த்து விடலாம்னு பாக்குறீங்களா?

மும்பை : ஹர்பஜன் சிங், ரோஹித் சர்மா குறித்து சொன்னதாக ஒரு பொய் செய்தி சமூக வலைதளத்தில் பரவியது.

அதை கண்டு கடுப்பாகியுள்ளார் ஹர்பஜன் சிங். இது போன்ற முட்டாள்தனமான புரளிகளை நிறுத்துங்கள் என சீறியுள்ளார் ஹர்பஜன்.

இந்தியா, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது. அந்த அணியில் ரோஹித் சர்மாவுக்கு இடம் கிடைக்குமா? இல்லையா? என்பது தெரியாத நிலை உள்ளது.

ரோஹித் சர்மா ஆடணும்

ரோஹித் சர்மா ஆடணும்

இந்திய அணியில் தோனி, கோலி போலவே ரோஹித் சர்மாவுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர்கள் சமூக வலை தளத்தில் ரோஹித் சர்மாவை டெஸ்ட் அணியில் ஆட வைக்க வேண்டும் என வற்புறுத்தி வருகின்றனர்.

ஹர்பஜன் மீம்

ஹர்பஜன் மீம்

அதில் யாரோ ஒருவர், "ரோஹித் சர்மாவை இந்திய டெஸ்ட் அணியில் (ஆடும் லெவனில்) சேர்க்கவில்லை என்றால் நான் ஆஸ்திரேலியாவை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பேன் - ஹர்பஜன் சிங்" என ஹர்பஜன் கூறியது போல ஒரு மீம் வெளியிட்டார்.

பரப்புவது யார்? ஹர்பஜன் கேள்வி

பரப்புவது யார்? ஹர்பஜன் கேள்வி

இதை கண்டு எரிச்சலான ஹர்பஜன் இது "பொய்யான சமூக வலை தளம்" என குறிப்பிட்டு, "இந்த முட்டாள்தனமான கருத்துக்களை நான் கூறியது போல பரப்புவது யார் என தெரியவில்லை. இவற்றை நிறுத்துங்கள்" என கூறியுள்ளார்.

சிறப்பு பயிற்சியில் ரோஹித்

சிறப்பு பயிற்சியில் ரோஹித்

இதற்கிடையே, ரோஹித் சர்மா சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அதை வைத்தும் அவரது ரசிகர்கள் முதல் டெஸ்டில் ரோஹித் ஆடுவார் என கூறி வருகிறார்கள்.

எங்களுக்கு ஓய்வு எல்லாம் தேவையில்லை.. சிறப்பு பயிற்சியில் இறங்கிய ரோஹித், அஸ்வின்

Story first published: Monday, December 3, 2018, 18:30 [IST]
Other articles published on Dec 3, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+