Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெறும் கிரவுண்டா இருந்தாலும் பரவாயில்லை. நான் ரெடிதான்.. என்ன ஹர்பஜன் சிங் இப்படி சொல்லிட்டாரு!

மும்பை: ஐபிஎல் போட்டிகளை வெறும் மைதானங்களில் நடத்தினாலும் கூட சரித்தான். நாங்கள் விளையாடுவதற்கு ரெடி என்று கூறியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங்.

Recommended Video

IPL 2020: Harbhajan says he is ready to play in empty grounds

கொரோனாவைரஸ் பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகளை ஏப்ரல் 15ம் தேதி வரைக்கும் தள்ளி வைத்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ஆனால் ஏப்ரல் 15ம் தேதிக்குப் பிறகும் கூட போட்டி நடைபெறுமா என்பது சந்தேகம்தான். காரணம் நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது.

போட்டிகளை நடத்த வேண்டும்

போட்டிகளை நடத்த வேண்டும்

இந்த நிலையில்தான் காலி மைதானத்திலாவது போட்டிகளை நடத்தலாமே என்று கருத்து தெரிவித்துள்ளார் ஹர்பஜன் சிங். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், காலி மைதானங்களில், ரசிகர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்தினால் கூட நான் அதை ஆட்சேபிக்க மாட்டேன். காரணம் போட்டிகள் நடந்தாக வேண்டும் என்று கூறியுள்ளார்.

நிலைமை சரியானதும் நடத்தலாம்

நிலைமை சரியானதும் நடத்தலாம்

அதேசமயம், நிலைமை சரியான பின்னர்தான் போட்டிகளை நடத்த வேண்டும். காரணம் பல பேரின் உயிர் இதில் அடங்கியுள்ளது. அதேசமயம் போட்டிகள் நடந்தால் அதை நம்பியுள்ள பலருக்கு வாழ்க்கை கிடைக்கும். ரசிகர்கள் முக்கியம்தான். ஆனால் சூழல் ஏற்பட்டால் ரசிகர்கள் இல்லாமல் கூட போட்டிகளில் ஆட ஒரு வீரராக நான் தயார்தான். அதற்காக நான் வருத்தப்பட மாட்டேன் என்றும் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

டிவிதான் இருக்கே

டிவிதான் இருக்கே

டிவி மூலமாக ஒவ்வொரு ரசிகரும் தவறாமல் கிரிக்கெட்டைப் பார்க்க முடியும். எந்தப் போட்டியையும் ரசிகர்கள் தவற விட வாய்ப்பில்லை. முதலில் கொரோனாவைரஸ் கட்டுக்குள் வர வேண்டும். வீரர்களுக்கு பாதுகாப்பு உண்டு என்பதை உறுதி செய்த பின்னர், ஹோட்டல்கள் திறக்கப்பட்டதும், விமானங்கள் மீண்டும் ஓடத் தொடங்கியதும் போட்டி நடைபெறும் இடங்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்த பிறகு போட்டிகளை நடத்தலாம். அப்போதுதான் போட்டிகளையும் சிறப்பாக நடத்த முடியும் என்று ஹர்பஜன் சிங் மேலும் கூறினார்.

ஐபிஎல்லை மிஸ் செய்கிறேன்

ஐபிஎல்லை மிஸ் செய்கிறேன்

நான் கிரிக்கெட்டை மிகவும் மிஸ் செய்கிறேன். ஐபிஎல்லை ரொம்பவே மிஸ் செய்கிறேன். ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் முழுத் தொடரையும் ஆட ஆர்வமாக இருந்தேன். மைதானங்களை , ரசிகர்களின் ஆர்வத்தை, அவர்கள் தூக்கிப் பிடித்திருக்கும் பதாகைகளை மிஸ் செய்கிறேன். நாங்கள் செல்லும் ஊர்களில் எல்லாம் மேற்கொள்ளும் பைக் ரைடுகளை மிஸ் செய்கிறேன். அணியினருடன் செல்லும் பஸ்களை மிஸ் செய்கிறேன். ஒவ்வொரு ரசிகரும் இப்படித்தான் இருப்பார் என நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

உடல் தகுதியுடன் இருக்கிறேன்

உடல் தகுதியுடன் இருக்கிறேன்

போட்டி எப்போது நடந்தாலும் விளையாட நான் தயார். முழு உடல் தகுதியுடன் தயார் நிலையில் உள்ளேன். விரைவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அதுவரை நான் உடல் தகுதியை தொடர்ந்து பார்த்துக் கொள்வேன் என்று கூறியுள்ளார் 39 வயதாகும் ஹர்பஜன் சிங். 103 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஹர்பஜன் சிங் இதற்கு முன்பு கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணிகளில் ஆடியுள்ளார்.

Story first published: Wednesday, April 8, 2020, 11:13 [IST]
Other articles published on Apr 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+