For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL - தோனிக்கு கோபம் வராதா? யாரு சொன்னா? ஹர்பஜன் சிங் வெளியிட்ட அதிர்ச்சி சம்பவம்

மும்பை : ஐபிஎல் தொடரில் தற்போது எல்லாம் யாரும் சிஎஸ்கே கேப்டன் தோனியை கூல் கேப்டன் என்று அழைப்பதில்லை. ஒரு காலத்தில் களத்தில் இடியே விழுந்தாலும் மகேந்திர சிங் தோனி தனது முகத்தில் எந்த ஒரு ரியாக்ஷனையும் காட்ட மாட்டார்.

ஆனால் தற்போது எல்லாம் பில்டர்கள் சாதாரண ஒரு பந்தை மிஸ் செய்தாலே தோனி தனது முகத்தில் கோபத்தைக் காட்டி விடுகிறார். பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் கூட ஃபீட்டிங்கில் தவறு செய்த சீனியர் வீரர் மோயின் அலியை திட்டிய சம்பவமும் நடைபெற்றது.

Harbhajan singh reveals about the MS Dhoni angry moment

இந்த நிலையில் தோனி பலமுறை சிஎஸ்கே அணிக்காக விளையாடிய போது கோபம் அடைந்திருப்பதாக மோயின் அலி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் தோனி ஒரு முறை பயிற்சி ஆட்டத்தில் கோபப்பட்டது எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நாங்கள் ராஞ்சியில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தோம்.

சிஎஸ்கே அணியை இரண்டாகப் பிரித்து எங்களுக்குள் நாங்கள் விளையாடினோம். அப்போது பயிற்சி ஆட்டத்தில் தோனியின் அணி ரன்களில் பின்தங்கி இருந்தது. தோனி கடைசியாக பேட்டிங் செய்துவிட்டு பிறகு டிரெஸ்ஸிங் ரூம் வந்தார். அப்போது தன்னுடைய பேட்டை தூக்கி எறிந்தார்.

இதில் பேட்டில் இருந்த கைப்பிடி உடைந்துவிட்டது. தோனிக்கு அந்த அளவு கோபம் இருந்தது என ஹர்பஜன் சிங் கூறினார். சிஎஸ்கே அணி இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு மீண்டும் ஐபிஎல் தொடரில் திரும்பிய போது கோப்பையை எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதற்காக தோனி கடுமையாக வீரர்களிடம் நடந்து கொண்டிருக்கிறார். ஆனால் 2017 ஆம் ஆண்டுக்கு முன்பெல்லாம் தோனி களத்தில் வீரர்களை திட்டியதே கிடையாது.

யாரேனும் தவறு செய்தாலும் கூட தோனி அமைதியாக சென்று விடுவார். ஆனால் மற்ற கேப்டன்கள் களத்திலே திட்டி விடுவார்கள். தற்போது தோனியிடம் இந்த பழக்கத்தை காண முடியவில்லை என்று ரசிகர்களும் கூறி வருகின்றனர். நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி 8 புள்ளிகள் பெற்று தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சிஎஸ்கே அணி 10 புள்ளிகள் உடன் டாப் 2 இடத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளது.

Story first published: Sunday, April 23, 2023, 18:05 [IST]
Other articles published on Apr 23, 2023
English summary
Harbhajan singh reveals about the MS Dhoni angry moment IPL - தோனிக்கு கோபம் வராதா? யாரு சொன்னா? ஹர்பஜன் சிங் வெளியிட்ட அதிர்ச்சி சம்பவம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+