Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித்-ன் அவசரத்தால் இந்திய அணி தோற்றதா??.. ஹர்பஜன் சிங் கடும் அதிருப்தி.. கப் போச்சே பிகிலு!!

இந்தூர்: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியின் போது ரோகித் சர்மாவின் பேச்சை கேட்டு சட்டீஸ்வர் புஜாரா விக்கெட்டை பறிகொடுத்துவிட்டார் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விளாசியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் சரிந்ததால் போட்டியை நழுவவிட்டுள்ளது.

இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 2 - 1 என மாறியுள்ளது. அடுத்த போட்டியில் வெற்றி கண்டால் மட்டுமே இந்தியாவால் தொடரை கைப்பற்ற முடியும், அதே போல டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றுக்கும் செல்ல முடியும்.

3வது டெஸ்ட் போட்டி

3வது டெஸ்ட் போட்டி

இது ஒருபுறம் இருக்க இந்த போட்டியில் சட்டீஸ்வர் புஜாரா மட்டும் இன்னும் சில நேரம் நீடித்து நின்றிருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. ஆனால் ரோகித் சர்மாவின் அறிவுரையின் பேரில் அவர் கவனத்தை இழந்து அவுட்டாகிவிட்டார். ஒருபுறம் விக்கெட்கள் சரிவதை உணர்ந்து மிகவும் நிதானாமாக விளையாடி வந்த புஜாரா, தூண் போல நின்று அரைசதத்தை கடந்தார்.

புஜாராவின் இன்னிங்ஸ்

புஜாராவின் இன்னிங்ஸ்

என்னடா இது எப்படி போட்டாலும் அவுட்டாகவில்லை என்று புலம்பும் அளவிற்கு தடுப்பாட்டம், பவுண்டரி என மாற்றி மாற்றி அடித்தார். ஆனால் இதெல்லாம் ரோகித் பார்க்கும் வரையில் தான். வாட்டர் பாயாக செல்லும் இஷான் கிஷானை அழைத்த ரோகித், மிட் ஆன் திசையில் தூக்கி அடிக்க சொல், அங்கு தான் யாருமே இல்லையே?, தடுப்பாட்டம் ஆடுவதை குறைக்க சொல் என அறிவுரை கூறி வழங்கினார். அவர் கூறியபடியே அடுத்த ஓவரிலேயே சிக்ஸர் விளாசிய புஜாரா அதிரடி மோடில் 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஹர்பஜன் சிங் அதிருப்தி

ஹர்பஜன் சிங் அதிருப்தி

இந்நிலையில் இதற்கு ஹர்பஜன் சிங் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ரோகித் என்ன கூறினார் என்று எனக்கு தெளிவாக தெரியவில்லை. மிட் ஆன் மீது அடிக்க வேண்டும் என்பது போல தான் இருந்தது. களத்திற்கு உள்ளே இருந்தும் விளையாடும் வீரருக்கு தான் சூழ்நிலை என்னவென்பது தெரியும். அதுவும் புஜாரா போன்ற வீரருக்கு மிக தெளிவாக தெரியும்.

அணியின் தேவைகள்

அணியின் தேவைகள்

சட்டீஸ்வர் புஜாராவை அவரின் போக்கில் விளையாட விட்டிருக்க வேண்டும். அணிக்கு தேவையானதை உடனடியாக நிறைவேற்றுபவர் புஜாரா. அதனால்தான் சூழலையும் மீறி சிக்ஸர் அடித்தார். புஜாராவுக்கு சிக்ஸர் அடிக்க தெரியாமல் இல்லை. சூழலுக்கு ஏற்ப நிதானமாக ஆடுகிறார் அவ்வளவு தான்.

டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்

டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்

எனவே இனி அவருக்கு அழுத்தம் கொடுத்து அதிரடி காட்ட வைக்க வேண்டாம்.

ஒரு டெஸ்ட் கிரிக்கெட் வீரரால் அசால்ட்டாக டி20 ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். அவர்களுக்கு நிதானமாகவும் ஆட தெரியும், சிக்ஸரையும் பறக்கவிட தெரியும். ஆனால் டி20 வீரரால் டெஸ்ட் கிரிக்கெட்டை சரியாக ஆடிவிட முடியாது என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

Story first published: Friday, March 3, 2023, 20:51 [IST]
Other articles published on Mar 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+