Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோல்வியின்றி வரலாறா... மோதி எழுவோம்... கேஜிஎப் வசனத்தை எடுத்து பொங்கிய ஹர்பஜன் சிங்..!!

மும்பை: தோல்வியின்றி வரலாறா... மோதி எழுவோம் என்று மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது குறித்து சென்னை வீரர் ஹர்பஜன் சிங் ஆவேசமாக ட்வீட் வெளியிட்டுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.அதில் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Harbhajan singh tweets about chennai super kings defeat against mumbai indians

அதன் மூலம், சென்னை அணியின் தொடர் வெற்றி முடிவுக்கு வந்தது. புள்ளிப் பட்டியலில் முதலிடம் பறிபோனது. தோனி அணியின் தோல்வி சென்னை ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது.

இந்நிலையில் அந்த தோல்வி குறித்து ஹர்பஜன் தமது ட்விட்டரில் ஆவேசமாக பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"அடி பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து அதோட கர்ஜனையை விட பயங்கரமாக இருக்கும். உலகில் தோல்விகள் காணாத வீரனே இல்லை, தோல்விகள் இல்லையென்றால் அவன் வீரனே இல்லை. மோதி எழுவோம் நாங்கள், தமிழே வெறும் கைதட்டலை மட்டும் தாங்கள் நீங்கள். @ChennaiIPL @IPL, தோல்வியின்றி வரலாறா" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ள இந்த ஆவேச வசனங்கள் அண்மையில் வெளியான கே.ஜி.எப் படத்தில் இடம் பெற்றிருந்தது. இந்த ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது.சென்னை ரசிகர்கள், தோனியின் படையினர் இந்த டுவீட்டை தாறுமாறாக பரப்பி வருகின்றனர்.

Story first published: Friday, April 5, 2019, 14:38 [IST]
Other articles published on Apr 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+