உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங்கமுன்னு... தமிழில் கலக்கிய ஹர்பஜன்!
Recommended Video

சென்னை: ஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது. வீரர்கள் பலரும் அனைத்து அணியாலும் எடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.
சென்னை அணி எந்த வீரர்களை எடுக்க வேண்டும் ஏற்கனவே முடிவு செய்து வைத்து இருக்கிறது. அஸ்வினை ஆர்டிஎம் மூலம் எடுக்க முடியாமல் போனதால் மாற்று பவுலர்களை எடுத்து இருக்கிறது.
முக்கியமாக முதல்முறையாக ஹர்பஜன் சிங்கை அணியில் எடுத்துள்ளது. ஹர்பஜன் தற்போது அதுகுறித்து டிவிட் செய்துள்ளார்.

சென்னையில் பஜ்ஜி
2 கோடிக்கு ஹர்பஜன் சிங் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை ஏலம் எடுத்து இருக்கிறது. இவரது குறைந்தபட்ச தொகை 2 கோடி ஆகும். அஸ்வினுக்கு பதில் இவர் ஸ்பின் பவுலாராக இருப்பார்.
டிவிட் செய்துள்ளார்
இதுகுறித்து ஹர்பஜன் டிவிட் செய்துள்ளார். அதில் ''வணக்கம் தமிழ்நாடு உங்ககூட இனி கிரிக்கெட் ஆட போறது ரொம்ப சந்தோஷம் உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங்கமுன்னு'' என்று குறிப்பிட்டுள்ளார்.
பழைய டிவிட்
இவர் ஏற்கனவே இப்படி டிவிட் செய்து இருக்கிறார். அதில் ''வேகமும் , விவேகமும் , உழைப்பும் , தூய்மையும் சொத்தாய் கொண்ட தமிழ் மக்கள் வாழ்வில் மகிழ்வோடு பொங்கட்டும் புது பொங்கல் என் இதயம் கனிந்த தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் உங்கள், ஹர்பஜன் சிங்'' என்று எழுதி இருந்தார்.
தெரியும்
இவர் இதற்குத்தான் தமிழில் டிவிட் செய்தாரா என்று பலரும் கேட்டு வருகிறார்கள். ''சென்னை தங்களை அன்புடன் வரவேற்கிறது 🙏 பொங்கல் வாழ்த்தும் அப்பறம் இரண்டு நாளா தமிழ்ல நீங்க டுவிட் பண்ணும் போதே தெரியும் 😜'' என்றுள்ளார்.


Click it and Unblock the Notifications