Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பையின் 2 முக்கிய வீரர்கள் பொதுவெளியில் மோதல்! நாக்அவுட் வரும் நேரத்திலா இப்படியாகனும்?

மும்பை: ஐபிஎல் நாக்அவுட் சுற்று தொடங்க உள்ள சூழ்நிலையில், புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் இருவர் டிவிட்டரில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விவகாரம் புழுதி கிளப்பியுள்ளது.

மோதிக்கொள்ளும் இரு வீரர்களும் சொந்த சகோதரர்கள் என்பதும், அணியின் முக்கிய வீரர்கள் என்பதும் இதில் கவனிக்கத்தக்கது.

லீக் ஆட்டங்களில், அபாரமாக ஆடி, புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ். இதற்கு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் அவர் உடன்பிறந்த சகோதரர், க்ருனால் பாண்ட்யா இருவரும் முக்கிய காரணம்.

பந்து வீச்சு, ஃபீல்டிங், சில நேரங்களில் பேட்டிங் என அனைத்து வகையிலும் மும்பை அணிக்கு முதுகெலும்பாக உள்ளனர் இந்த சகோதரர்கள். ஆனால், "ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில் கொஞ்சம் பிரிவு வந்தால் பின்பு உறவு வரும்" என்ற எம்.ஜி.ஆர் பாடலை போல இப்போது இவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டுள்ளது.

ஏமாற்றிவிட்டார்கள்

கோபக்காரரான ஹர்திக் பாண்யாதான் முதலில் சண்டையை ஆரம்பித்து டிவிட் போட்டுள்ளார். "வாழ்க்கையில் சில நேரங்களில், உங்களோடு நெருக்கமாக உள்ளவர்கள்தான், உங்களை அதிகம் ஏமாற்றிவிடுவார்கள். இது கூல் இல்லை, ப்ரோ!" என டிவிட் செய்திருந்தார்.

ரசிகர்களுக்கு குழப்பம்

ரசிகர்களுக்கு குழப்பம்

முதலில் இது யார் குறித்தோ போடப்பட்ட டிவிட் எனதான் ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால், அவரது சகோதரர் க்ருனால் பாண்ட்யா, ஹர்திக்கின் டிவிட்டுக்கு போய் பதில் கொடுத்ததன் மூலம், இது அண்ணன்-தம்பி சண்டை என தெரியவந்தது ரசிகர்களுக்கு.

சகோதர யுத்தம்

க்ருணால் பாண்ட்யா கூறுகையில் "முதலில் இது நடந்திருக்க கூடாது. சில காரணங்களால் நான்தான் பெரிய அண்ணன். இதை பெரிய விஷயமாக செய்ய வேண்டாம்" என கூறியுள்ளார் க்ருணால் பாண்ட்யா.

பாண்டியர்களை கேலி செய்யும் சேவாக்

இரு பாண்டியர்களும் எதைப் பற்றி பேசுகிறார்கள் என்பது ரசிகர்களுக்கு புரியவில்லை. ஆனால் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் இதை கேலி செய்யும் வகையில் டிவிட் போட்டுள்ளார்.

இது தேவையா?

இது தேவையா?

ஐபிஎல் சீசன் முக்கிய கட்டத்தை அடைந்துள்ள நேரத்தில் இரு சகோதரர்களும் பொது வெளியில் முட்டிக்கொள்வது அம்பானி அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வீட்டுக்குள் போய் சண்டை போடுங்கப்பா என ரசிகர்கள் அட்வைஸ் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

Story first published: Monday, May 15, 2017, 13:17 [IST]
Other articles published on May 15, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+