Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொஞ்சம் விட்டு இருந்தா ஜெயிலுக்கு போய் இருப்பேன்.. இந்திய கிரிக்கெட் வீரரின் கலகல பேட்டி!

டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவம் குறித்து பேசி உள்ளார். மேற்கிந்திய தீவுகளில் இருந்த போது தன்னை போலீஸ் கைது செய்ய முயற்சி செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த சம்பவத்திற்கு மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் பொல்லார்ட்தான் காரணம் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். அப்போது நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றையும் அவர் தனது பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் பொல்லார்டும், பாண்டியாவும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாண்டியா பேட்டி நிகழ்ச்சி

பாண்டியா பேட்டி நிகழ்ச்சி

பிரேக்பாஸ்ட் வித் சாம்பியன்ஸ் என்ற நிகழ்ச்சி தற்போது கிரிக்கெட் உலகில் மிகவும் பிரபலம் ஆக இருக்கிறது. கவுரவ் கப்பூர் என்ற பிரபல தொகுப்பாளர் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். இவர் இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் நக்கலும் நையாண்டியுமாக நிறைய கேள்விகள் கேட்பார். மேலும் சமயங்களில் இந்த பேட்டிகளில் உணர்ச்சிபூர்வமாக சில சம்பவங்களும் நடக்கும். தற்போது இந்த பேட்டியில் ஹர்திக் பாண்டியா கலந்து கொண்டார்.

பொல்லார்டுடன் சுத்திய பாண்டியா

பொல்லார்டுடன் சுத்திய பாண்டியா

இதில் பாண்டியா தனக்கும் பொல்லார்டுக்கும் இடையில் இருக்கும் நட்பு குறித்து பேசினார். அதில் ''பொல்லார்ட் எனக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து அறிமுகம் ஆனார். அவரும் நானும் நெருங்கிய நண்பர்கள். அவருக்கு நான் இந்தியாவை சுற்றி காட்டி இருக்கிறேன். அவர் எனக்கு மேற்கிந்திய தீவுகளை சுற்றி காட்டி இருக்கிறார். சென்ற முறை மேற்கிந்திய தீவுகளுக்கு சென்ற போது போலீஸ் என்னை கைது செய்த முயற்சி செய்தது'' என்றார்.

போலீஸ் கைது

போலீஸ் கைது

இந்த கைது சம்பவம் குறித்து கவுரவ் விரிவாக கேட்டார். அதற்கு பாண்டியா ''அந்த போலீஸ் என்னுடைய கையில் விலங்கு மாட்ட முயற்சி செய்தார். மேலும் யாருக்கோ போன் செய்து என்னை குறித்து தகவல் அளித்தார். நான் நம்பி வந்த பொல்லார்ட் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை'' என்று குறிப்பிட்டார்.

ஏமாற்றிவிட்டார்கள்

ஏமாற்றிவிட்டார்கள்

இந்த சம்பவம் குறித்து அவர் மேலும் பேசினார். அதில் ''அப்போதுதான் கவனித்தேன் அந்த போலீஸ் போனை தலைகீழாக வைத்து பேசிக்கொண்டு இருந்தார். பின்தான் தெரிந்தது அவர் பொல்லார்ட்டின் நண்பர் என்று. பொல்லார்ட் என்னை ஏமாற்றுவதற்காக அப்படி செய்து இருக்கிறார். பின் சிரித்துக் கொண்டே சமாளித்துவிட்டேன்'' என்று காமெடியாக குறிப்பிட்டு இருக்கிறார்.

Story first published: Sunday, December 3, 2017, 17:35 [IST]
Other articles published on Dec 3, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+