Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனக்குனே வருவீங்களா டா.. இஷான் கிஷான் மீது கொலை வெறியில் இருந்த ஹர்திக் பாண்டியா.. என்ன நடந்தது?

பார்பிடாஸ் : கிரிக்கெட் களத்திற்கு இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று களம் இறங்கினார். வெஸ்ட் இண்டீஸ் எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடியது.

எனினும் இந்திய அணியின் பேட்டிங் கொஞ்சம் தடுமாறியது. இதற்கு காரணம் ஆடுகளம் மிகவும் மோசமான வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

Hardik pandya caught in unlucky run out from bowlers end vs wi 1st odi

ஹர்திக் பாண்டியா இரண்டு மாதத்திற்கு பிறகு களத்திற்கு திரும்பியதால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தன்னுடைய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைத்தார். இந்திய அணியின் துணை கேப்டனாக இருப்பதாலும் வேகப்பந்து வீச்சில் அனுபவ வீரராக இருப்பதாலும் அவர் மீது கடும் நெருக்கடி இருந்தது. எனினும் மூன்று ஓவரை வீசி 17 ரன்களை ஹர்திக் பாண்டியா விட்டுக் கொடுத்தாலும் ஒரு முக்கிய விக்கெட்டை கைப்பற்றினார்.

இதனை தொடர்ந்து சுழற் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினர். இதனால் அந்த அணி 114 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கில், சூரியகுமார் யாதவ் ஆகியோர் அடுத்தடுத்த ஆட்டம் இழந்தனர்.

இதனால் ஹர்திக் பாண்டியாவும் இஷான் கிஷனும் ஜோடி சேர்ந்து விளையாடினர். ஹர்திக் பாண்டியா நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருப்பதால் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என களத்தில் நின்றார். அப்போது ஆட்டத்தின் 13 புள்ளி 1 வது ஓவரில் இஷான் கிஷன் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அவர் ஒரு ஷாட்டை அடித்தார்.

அதனை பந்து வீச்சாளர் யானச் கரியா கேட்ச் பிடிக்க முயன்ற போது அது அவர் கையில் பட்டு நேராக ஸ்டெம்பில் சென்று அடித்தது. ஆனால் ஹர்திக் பாண்டியா கிரீசை விட்டு வெளியே வந்து நின்றார். பந்து ஸ்டெம்பை அடிப்பதற்குள் பேட்டை கொண்டு சென்று விட வேண்டும் என நினைத்தார். ஆனால் அது முடியவில்லை. இதனால் மிகவும் ஏமாற்றத்துடன் தலையில் கையில் வைத்துக் கொண்டு நோக்கி சென்றார். நீண்ட நாட்களுக்குப் பிறகு களத்திற்கு திரும்பி பேட்டிங்கில் அசத்த வேண்டும் என ஹர்திக் பாண்டியா வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, July 28, 2023, 0:03 [IST]
Other articles published on Jul 28, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+