Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முட்டிக் கொண்ட வீரர்கள்... விதிகளை மீறினா சும்மா விடுவமா.. ஐபிஎல் பாய்ச்சல்

துபாய் : நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய நிலையில், ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் விரோதம் பாராட்டினர்.

ஒரு கட்டத்தில் ஹர்திக் பாண்டியாவின் அவுட்டையடுத்து ஆர்சிபி வீரர் கிறிஸ் மோரீஸ் மற்றும் பாண்டியா இருவருக்கும் இடையில் வார்த்தை போர் மூண்டது.

Hardik Pandya, Chris Morris Reprimanded For Breaching Code Of Conduct

இந்நிலையில் ஐபிஎல் நடத்தை விதிமுறைகளை மீறி இருவரும் நடந்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள ஐபிஎல் நிர்வாகம் இருவருக்கும் தண்டனை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கிடையில் நடைபெற்ற நேற்றைய ஐபிஎல்லின் 48வது லீக் போட்டியில் ஆரம்பம் முதலே ஆர்சிபி அணி வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் வீரர்களை சீண்டுவதும் அதற்கு மும்பை வீரர்கள் எதிர்வினையாற்றுவதுமாக இருந்தது.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியா அவுட் ஆனதையடுத்து, பந்து வீசிய ஆர்சிபி பௌலர் கிறிஸ் மோரீஸ் அவரை சீண்ட, பதிலுக்கு பாண்டியா ஏதோ பேச, அங்கே வார்த்தை போர் மூண்டது. இந்நிலையில் அவர்கள் இருவரும் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியுள்ளதாக தெரிவித்துள்ள ஐபிஎல் நிர்வாகம், இருவரும் இதற்கென தண்டிக்க பெறுவார்கள் என்றும் அறிக்கை மூலம் குறிப்பிட்டுள்ளது.

இவர்கள் இருவரும் முதல் லெவலில் தண்டனை பெறவுள்ளதாகவும், போட்டியின் நடுவர் இவர்களுக்கான தண்டனையை தீர்மானிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Story first published: Thursday, October 29, 2020, 13:17 [IST]
Other articles published on Oct 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+