Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இறந்த தந்தைக்காக கண்ணீர் விட்ட ஹர்திக்.. "என் தந்தை இருந்தால் சந்தோஷப்பட்டு இருப்பார்".. உருகிய ஹீரோ

மெல்போர்ன் : டி20 உலககோப்பையில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்திய பிறகு வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது ஹர்திக் பாண்டியா தனது தந்தை நினைத்து கண்ணீர் விட்டு அழுதார்.

டி20 உலக கோப்பையில் இந்தியா வெற்றி பெற்றதற்கு கோலி எவ்வளவு முக்கியமோ, அதே போன்று ஹர்திக் பாண்டியாவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.

பாகிஸ்தான் அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு இருந்த போது ஹர்திக் பாண்டியா ஒரே ஓவரில் 2 விக்கெட் வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

3 விக்கெட்

3 விக்கெட்

4 ஓவர்கள் வீசி 30 ரன்களை விட்டு கொடுத்த பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷதாப் கான், நவாஸ் கான், ஹைதர் அலி என 3 முக்கிய வீரர்களை வீழ்த்தினார். இதே போன்று பேட்டிங்கில் விராட் கோலியிடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி பார்ட்னர்ஷிப் அமைத்தார். தொடர்ந்து கோலிக்கு உறுதுணையாக ஹர்திக் நின்றார்.

பேட்டிங்கில் 40 ரன்கள்

பேட்டிங்கில் 40 ரன்கள்

கடைசி ஓவரில் தான் பாண்டியா ஆட்டமிழந்தார். இதன் மூலம் 37 பந்தில் 40 ரன்களை அவர் சேர்த்தார். இந்த நிலையில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு ஹர்திக் பாண்டியா உற்சாகமாக கொண்டாடினார். அப்போது தனது மறைந்த தந்தையை நினைத்து பாண்டியா கண்ணீர் விட்டு அழுதார்.

கண்ணீர் விட்ட ஹர்திக்

கண்ணீர் விட்ட ஹர்திக்

இது குறித்து பேசிய அவர், என் தந்தையை நினைத்து தான் அழுதேன். இதற்கு முன்பு நான் அவ்வளவாக தந்தையை நினைத்து அழுதது இல்லை. என் மகனை எனக்கு பிடிக்கும். ஆனால் என் தந்தை எனக்காக செய்ததை, என் மகனுக்கு நான் செய்ய முடியுமா என்று தெரியவில்லை. ஒரு 6 வயது குழந்தைகளின் கனவிற்காக , என் தந்தை ஊரை விட்டு வேறு நகரத்திற்கு வந்தார்.

தந்தைக்கு சமர்ப்பணம்

தந்தைக்கு சமர்ப்பணம்

அதுவும் நாங்கள் இப்படி பெரிய ஆளாக வருவோம் என்று தெரியாமல் வந்தார். இதனால் இந்த வெற்றியை அவருக்காக சமர்பிக்கிறேன் என்று ஹர்திக் பாண்டியா அழுதார். விராட் கோலியுடன் அமைத்த பார்ட்னர்ஷிப்பை தம் வாழ்நாளில் மறக்க முடியாது என்று குறிப்பிட்ட ஹர்திக் பாண்டியா, விராட் கோலி அடித்த சிக்சர்கள் பார்க்க அவ்வளவு பிரமிப்பாக இருந்ததாக கூறினார்.

Story first published: Sunday, October 23, 2022, 21:14 [IST]
Other articles published on Oct 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+