Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“பலே வெள்ளையத் தேவா”.. முன்னாள் மனைவிக்கு 4 கோடி.. காதலிக்கு 1.7 கோடி.. ஹர்திக் பாண்டியா பரிசு மழை

மும்பை: 2026 ஐபிஎல் தொடர் தொடங்கி இருக்கும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளார். தனது காதலிக்கு விலையுயர்ந்த கார் ஒன்றை ஹர்திக் பாண்டியா பரிசாக வழங்கி இருக்கிறார். ஹர்திக் பாண்டியா தனது காதலி மஹேகா சர்மாவிற்கு சுமார் 1.7 கோடி ரூபாய் மதிப்பிலான மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் ரக சொகுசு வேனைப் பரிசாக வழங்கியுள்ளார். கடந்த மாதம் தன் முன்னாள் மனைவி நடாஷா மற்றும் மகனுக்கு பெரிய சொகுசு கார் ஒன்றை பரிசளித்து இருந்தார்.

மும்பையில் உள்ள ஒரு கார் விற்பனையாளர், இந்த வேனை டெலிவரி செய்யும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இது தற்போது ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. ஹர்திக் பாண்டியாவிடம் பெராரி, லம்போர்கினி போன்ற அதிவேகமாகச் செல்லும் ஸ்போர்ட்ஸ் கார்கள் பல உள்ளன. ஆனால், இப்போது அவர் வாங்கியுள்ள இந்த மெர்சிடிஸ் வேன் வேகம் என்பதைத் தாண்டி, அதிக சொகுசு மற்றும் வசதிகளுக்காக அறியப்படுகிறது.

Hardik Pandya Gifted Luxury Car to Girlfriend Maheka Sharma Ahead of IPL 2026 Season

இந்தியாவில் உள்ள மிகச் சில சொகுசு வேன்களில் இதுவும் ஒன்று. இதில் சாய்ந்து அமரும் வசதி கொண்ட இருக்கைகள், நவீன விளக்குகள், அதிக இடவசதி மற்றும் சிறந்த இசை அமைப்பு எனப் பல சிறப்பம்சங்கள் உள்ளன. இது ஒரு நடமாடும் சொகுசு அறையைப் போன்றது.

இதற்கு முன்பாக, கடந்த மாதம் ஹர்திக் பாண்டியா தனது முன்னாள் மனைவி நடாசா ஸ்டான்கோவிக் மற்றும் அவரது மகனுக்காகச் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு எஸ்யுவி ரக காரைப் பரிசாக வழங்கி இருந்தார். இப்போது காதலிக்கு வழங்கியுள்ள பரிசையும், முன்னாள் மனைவிக்கு வழங்கிய பரிசையும் ரசிகர்கள் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர்.

2026 ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில், ஹர்திக் பாண்டியாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த இத்தகைய செய்திகள் அவர் மீதான கவனத்தை அதிகப்படுத்தியுள்ளன. ஒருபுறம் இது அவருக்குப் புகழைத் தேடித்தந்தாலும், மறுபுறம் மைதானத்தில் அவர் எப்படிச் செயல்படப் போகிறார் என்ற அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள ஹர்திக் பாண்டியா, இந்தத் தொடரில் தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

Story first published: Monday, March 30, 2026, 13:27 [IST]
Other articles published on Mar 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+