For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹர்திக் பாண்டியா ஹாட்ரிக் சிக்சர்.. கேஎல் ராகுல் சாதனை.. சூர்யகுமார், மிரட்டல் பேட்டிங்..IND vs AUS

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் சாதனை படைத்தார்.

Recommended Video

Hardik Pandya-வின் பதிலால் விழுந்து சிரித்த பத்திரிகையாளர்கள்

பெரும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆட்டத்தில், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரும் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ரிஷப் பண்ட்,பும்ரா ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக், உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டனர்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச், முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதனால், இரண்டாவதாக பந்துவீசும் அணிக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதால் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாட முற்பட்டனர். ஆனால், ஹேசல்வுட், பாட் கம்மின்ஸ் ஆகியோர் கட்டுக்கோப்பாக பந்துவீசினர்.

ரோகித் அவுட்

ரோகித் அவுட்

இந்திய அணியில் குறிப்பாக கேஎல் ராகுலின் ஸ்ட்ரைக் ரேட் விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்ததால், அவரும் அதிரடியை காட்ட முயற்சி செய்தார். 2வது ஓவரில் பாட் கம்மின்ஸ் வீசிய முதல் 3 பந்துகளில் ரன் போகவில்லை. இருப்பினும் ரோகித் சர்மா தனது அதிரடியை காட்டி ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியை விரட்டி 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கோலி அவுட்

கோலி அவுட்

இதன் பிறகு கேஎல் ராகுல் அதிரடியை காட்டி ரன்களை சேர்த்தார். விராட் கோலி வந்ததும் ஆடம் சாம்பா பந்துவீச வந்தார். அவர் பந்தை எதிர்கொள்ளவும் சற்று கோலி தடுமாறினார். இதனால், டாட் பந்துகள் அதிகமாக தொடங்கியதால், ஆட்டத்தில் அழுத்தம் ஏற்பட்டது. அதனை உடைக்க விராட் கோலி 2 ரன்னில் இருந்த போது ஒரு ஷாட் ஆடி ஆட்டமிழந்தார். இதனையடுத்து கேஎல் ராகுல், சூர்யகுமார் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை மீட்டனர்.

ராகுல் சாதனை

ராகுல் சாதனை

குறிப்பாக கேஎல் ராகுல் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனத்துக்கு பேட்டால பதிலடி தந்தார். 35 பந்துகளில் 55 ரன்கள் விளாசிய நிலையில், ராகுல் கேட்ச் ஆனார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்கள் அடித்த 3வது வீரர் என்ற பெருமையை பெற்றார். சூர்யகுமாரும் தனது சிக்சர் வேட்டையை தொடங்க, அவரும் 25 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

ஹர்திக் சரவெடி

ஹர்திக் சரவெடி

தினேஷ் கார்த்திக்கிற்கு முன்பாக களமிறக்கப்பட்ட அக்சர் பட்டேல் 6 ரன்களில் வெளியேற, ஹர்திக் பாண்டியா இறுதியில் ருத்ரதாண்டவம் ஆடினார். குறிப்பாக கடைசி ஓவரில் கடைசி 3 பந்தில் ஹாட்ரிக் சிக்சர் விளாச, 30 பந்துகளில் ஹர்திக் பாண்டியா 71 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது.

Story first published: Tuesday, September 20, 2022, 21:06 [IST]
Other articles published on Sep 20, 2022
English summary
Hardik Pandya Great Batting as India set 209 runs as target ஹர்திக் பாண்டியா ஹாட்ரிக் சிக்சர்.. கேஎல் ராகுல் சாதனை.. சூர்யகுமார், மிரட்டல் பேட்டிங்..IND vs AUS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+