ஆளுக்கு 20 லட்சம் நல்ல காரியத்துக்கு கொடுக்கணும்.. பண்டியா, ராகுலுக்கு இதுதான் தண்டனை!
Recommended Video
மும்பை : பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு விவகாரத்தில் ஹர்திக் பண்டியா மற்றும் ராகுலுக்கு 20 லட்சம் அபராதம் விதித்துள்ளார் பிசிசிஐ-யின் விசாரணை அதிகாரி டிகே ஜெயின்.
ஹிந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஹர்திக் பண்டியா, ராகுல் இரவரும் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் பண்டியா பெண்கள் குறித்து பேசிய கருத்துக்கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இடைக்காலத் தடை
இதையடுத்து, பிசிசிஐ இருவருக்கும் இடைக்காலத் தடை விதித்தது. அதனால், இருவரும் உலகக்கோப்பைக்கு முன் முக்கியமான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடர்களில் ஆடும் வாய்ப்பை இழந்தனர். விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டதை அடுத்து, இடைக்காலத் தடை நீக்கப்பட்டது.

வாக்குறுதி
தொடர்ந்து இருவரும் இந்திய அணிக்காக ஆடி வந்தனர். தற்போது ஐபிஎல் தொடரில் ஆடி வருகின்றனர். இந்த நிலையில், இவர்கள் மீதான விசாரணை நடைபெற்றது. விசாரணையில் இருவரும் தவறை ஒப்புக்கொண்டு இனி பொதுவெளியில் கவனமாக இருப்போம். சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசமாட்டோம் என வாக்குறுதி அளித்தனர்.

20 லட்சம் அபராதம்
இதையடுத்து, அவர்களுக்கு அபராதம் மட்டும் விதித்து உத்தரவிட்டுள்ளார் விசாரணை அதிகாரி டிகே ஜெயின். இருவரும் தலா 20 லட்சம் ரூபாய் தொகையை நன்கொடையாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

யாருக்கு நன்கொடை?
பணியில் உயிரிழந்த 10 துணை ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்சம் ரூபாய், பார்வையற்றோர் கிரிக்கெட் அமைப்புக்கு 10 லட்சம் ரூபாய் என பிரித்து நன்கொடையாக வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நான்கு வாரம்
இந்த தொகையை இருவரும் அடுத்த 4 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். அப்படி இல்லாத பட்சத்தில் பிசிசிஐ அவர்களது சம்பளத்தில் இருந்து இந்த தொகையை பிடித்தம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications