Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்திக் நினைத்தால் 2 பேருக்கு வாய்ப்பு.. ரோகித் தலைவலி தீர ஒரே வழி.. இந்திய அணி குழப்பம் தீரும்

மும்பை: டி20 உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரும் குழப்பம் நீடிக்கிறது.

ஜடேஜா காயமான நிலையில், தறபோது அணியில் ரிஷப் பண்ட் தவிர வேறு இடதுகை பேட்ஸ்மேன்கள் இல்லை. ஆனால் பண்ட்க்காக தினேஷ் கார்த்திக்கை நீக்கிவட்டால் என்ன நடக்கும் என்று ஆசிய கோப்பை தொடரில் பார்த்துவிட்டோம்.

இதே போன்று சுழற்பநதுவீச்சாளரை முடிவு செய்வதில் குழப்பம் நீடிக்கிறது. இந்த பிரச்சினை எல்லாம் தீர ஒரே வழி தான் இருக்கிறது.

ஒரே தீர்வு

ஒரே தீர்வு

இந்திய அணி தற்போது ஹர்திக் பாண்டியாவுடன் சேர்த்து 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் விளையாடுகிறது. இதன் காரணமாக பிளேயிங் லெவனில் தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பண்ட் என ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு என்ற சூழல் உருவாகியுள்ளது. இதில் ஹர்திக் பாண்டியா மட்டும் 4 ஓவர்களை கட்டுக்கோபபாக வீசிவிட்டார் என்றால், இந்தியா 3 வேகப்பந்துவீச்சாளரை வைத்தே விளையாடலாம்.

பண்ட் பிரச்சினை

பண்ட் பிரச்சினை

இதனால் பிளேயிங் லெவனில் ஐந்தாவது இடத்தில் ஹர்திக், 6வது இடத்தில் ரிஷப் பண்ட், 7வது இடத்தில் தினேஷ் கார்த்திக், 8 மற்றும் 9வது இடத்தில் 2 சுழற்பந்துவீச்சாளர்கள், 10வது மற்றும் 11வது இடத்தில் இரணடு வேகப்பந்துவீச்சாளர்கள் என வைத்து அணியின் கட்டமைப்பை உறுதியாக்கி விடலாம்.

சுழற்பந்துவீச்சு பிரச்சினை

சுழற்பந்துவீச்சு பிரச்சினை

இல்லை எனக்கு பேட்ஸ்மேன் தேவையில்லை , ஒரு ஆல்ரவுண்டர் சுழற்பந்துவீச்சாளர் போதும் என நினைத்தால், அப்போதும் ஹர்திக்கை 3வது வேகப்பந்துவீச்சாளராக பயன்படுத்திவிட்டு, பிளேயிங் லெவனில், 5வது இடத்தில் ஹர்திக், 6வது இடத்தில் தினேஷ் கார்த்திக், 7வது இடத்தில் அக்சர் அல்லது தீபக் ஹூடா, 8வது இடத்தில் அஸ்வின், 9வது இடத்தில் சாஹல் மற்றும் 10 மற்றும் 11வது இடத்தில் முறையே புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ராவை பயன்படுத்தலாம்.

எந்த பிளான்

எந்த பிளான்

ஆஸ்திரேலிய ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், அங்கு 2 சுழற்பந்துவீச்சாளர்கள் போதும். இதனால் , கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை வைத்து விளையாட தான் அணி நிர்வாகம் முடிவு எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. அது ரிஷப் பண்டா ? தினேஷ் கார்த்திக்கா ? தீபக் ஹூடாவா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Story first published: Thursday, September 15, 2022, 15:15 [IST]
Other articles published on Sep 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+