மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் எதிர்காலம் என்ன? அம்பானி குடும்பத்துடன் டீலிங்
மும்பை: ஐபிஎல் 2026 சீசனில்படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அடுத்த சீசனுக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு பெரிய மாற்றத்திற்கு தயாராகி வருகிறது. ஐந்து முறை சாமபியனான மும்பை அணி, வெறும் நான்கு வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது. இது அதன் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் பல மூத்த வீரர்களின் எதிர்காலம் குறித்த தீவிரமான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஹர்திக் பாண்டியா தற்போது டிரேட் விண்டோவின் மையப்புள்ளியாக இருந்து வருகிறார். இந்த நட்சத்திர வீரரை தங்கள் அணியில் சேர்க்க பல அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. அதன்படி, 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் இதில் முன்னணியில் இருந்தாலும், பல்வேறு காரணங்களால் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் எந்தவொரு ஒப்பந்தத்தையும் எட்ட முடியவில்லை.

கேகேஆர் அணி முன்மொழிந்த டிரேடிங் வாய்ப்புகள் மும்பை அணிக்கு திருப்திகரமாக இல்லை. இதில் கேமரூன் கிரீனும் அடங்குவார். 25.20 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நட்சத்திர ஆல்-ரவுண்டர் கடந்த காலத்தில் மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடியிருந்தாலும், 2027 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணியின் பிஸியான கால அட்டவணையை கருத்தில் கொண்டு, அவரது உடற்தகுதி மற்றும் விளையாடும் வாய்ப்பு குறித்து மும்பை அணிக்கு சந்தேகங்கள் உள்ளன.
இதற்கிடையில், சமீபத்தில் ஸ்டீபன் பிளெமிங்குடனான தனது உறவை துண்டித்துக் கொண்ட சிஎஸ்கே அணி, தங்களது புதிய தலைமை பயிற்சியாளரை முடிவு செய்த பின்னரே பாண்டியா தொடர்பான அடுத்தகட்ட சலுகைகளை வழங்க முடியும்.
ஹர்திக் பாண்டியா டிரேட் செய்யப்படாமலோ அல்லது விடுவிக்கப்படாமலோ இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. "ஹர்திக் பாண்டியா டிரேட் செய்யப்படாவிட்டால் ஆச்சரியடுவதற்கில்லை. இது தொடர்பாக விவாதங்கள் அவருடன் நடந்துள்ளன. ஒரு டிரேட் நடக்க வேண்டுமென்றால், பல விஷயங்கள் சரியாக அமைய வேண்டும். எனவே இது அவ்வளவு எளிதானது அல்ல" என்று மும்பை இந்தியன்ஸ் வட்டாரம் தெரிவிக்கின்றன.
கேப்டன்சியைப் பொறுத்தவரை, மும்பை இந்தியன்ஸ் அணி தங்களின் மிகவும் வெற்றிகரமான கேப்டனான ரோஹித் சர்மாவிடமே மீண்டும் பொறுப்பை ஒப்படைப்பது குறித்து பரிசீலித்தது. இருப்பினும், ரோகித் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்க ஆர்வம் காட்டவில்லை. ஆனால் பாண்டியாவின் அடுத்த வாரிசைத் தேர்ந்தெடுக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
ஹர்திக் பாண்டியா இல்லாத சமயங்களில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மும்பை அணியை வழிநடத்தியுள்ளனர். ஆனால் அணி நிர்வாகம் திலக் வர்மா வடிவில் ஒரு நீண்ட கால கேப்டன் திட்டத்திற்கு வைத்துள்ளது. ஆனால், அடுத்த சீசன் ஹர்திக் பாண்டியாவே கேப்டனாக தொடர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications

