For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

MI vs KKR: ஹர்திக் பாண்ட்யா மீண்டும் அணியில் இருந்து நீக்கம்.. பதில் சொல்லாமல் ரோஹித் "எஸ்கேப்"

அபுதாபி: இந்த ஹர்திக் பாண்ட்யாவுக்கு என்னதான் ஆச்சு? மீண்டும் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் பகுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், இன்று (செப்.23) நடைபெறும் ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

hardik pandya missed our again in mumbai indians vs kkr ipl 2021

இந்நிலையில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் மோர்கன் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். சென்னைக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடாத ரோஹித் ஷர்மா, இந்த போட்டியில் மீண்டும் கேப்டனாக களமிறங்கியுள்ளார். மும்பை அணியில், குயின்டன் டி காக் (w), ரோஹித் சர்மா (c), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சவுரப் திவாரி, கைரன் பொல்லார்ட், க்ருனால் பாண்ட்யா, ஆடம் மில்னே, ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

அதே போல், கொல்கத்தா அணியில், ஷுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் த்ரிபாதி, நிதிஷ் ராணா, இயன் மோர்கன் (c), தினேஷ் கார்த்திக் (w), ஆந்த்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், லோக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இந்த இரண்டாம் பகுதியில் முதல் போட்டியில் பலம் வாய்ந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி அதிக நம்பிக்கை பெற்றுள்ளது. இதனால், இந்த போட்டியிலும் மும்பைக்கு கடும் டஃப் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். மிஸ்டரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தியின் பவுலிங் கொல்கத்தா அணிக்கு பெரும் பலமாக உள்ளது.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு இடம் கிடைக்காதது புரியாத புதிராக உள்ளது. சென்னைக்கு எதிரான போட்டியில் அவர் ஏன் அணியில் இடம்பெறவில்லை என்பதற்கான காரணத்தை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், இன்று 2வது போட்டியில் ரோஹித் ஷர்மா அணிக்கு திரும்பிவிட்ட நிலையில், ஹர்திக் பாண்ட்யாவுக்கு மட்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஹர்திக் பாண்ட்யா காயத்தில் சிக்கித் தவிக்கிறாரா? அல்லது ஃபார்மில் இல்லாததால் அணியில் சேர்க்கப்படவில்லையா? எனது குறித்து பெரும் குழப்பம் நிலவுகிறது. சென்னைக்கு எதிரான போட்டி தினத்தின் கூட அவரை மைதானத்தில் பயிற்சியில் காண முடிந்தது. ஆனால், இன்றைய போட்டியில் அவரை ஸ்டேடியத்தில் கூட காண முடியவில்லை. அப்படி வெளியே சொல்லக் கூட முடியாத அளவுக்கு என்னதான் பிரச்சனை என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இன்று டாஸ் போடப்பட்ட போது கூட, ஹர்திக் பாண்ட்யா குறித்து ரோஹித் வாய்த் திறக்கவில்லை.

Story first published: Thursday, September 23, 2021, 22:27 [IST]
Other articles published on Sep 23, 2021
English summary
hardik pandya umbai indians vs kkr ipl 2021 - ஹர்திக்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+