For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"எல்லாமே பொய்.. விவாகரத்து நாடகம்.. ரசிகர்களை ஏமாற்றிய ஹர்திக் பாண்டியா?" விளாசிய ரோஹித் குப்தா

மும்பை : ஹர்திக் பாண்டியாவுக்கும், அவரது மனைவி நடாஷாவிற்கும் விவாகரத்து ஆக உள்ளதாக கடந்த ஐந்து நாட்களாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் இது எல்லாமே நாடகம் எனவும், தனது தோல்விகளை மறைக்க ஹர்திக் பாண்டியா இப்படி செய்கிறார் எனவும் வட இந்திய யூடியூபரான ரோகித் குப்தா என்பவர் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். அவரை கேப்டனாக நியமித்ததில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் அதிருப்தியில் இருந்தனர். மேலும் அந்த அணி மிக மோசமாக விளையாடி 14 லீக் போட்டிகளில் நான்கு வெற்றிகள் மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. மேலும், பெரும்பாலான ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவை விரும்பவில்லை. ஐபிஎல் போட்டிகளின் போது அவர் எப்போது ஆடுகளத்துக்கு வந்தாலும் அவருக்கு எதிராக கோஷமிட்டு வந்தனர்.

T20 World Cup Indian national cricket team Cricket 20 2024

தற்போது ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்காக டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட உள்ளார். இந்த நிலையில் இந்திய ரசிகர்களின் ஆதரவை பெற வேண்டி இந்த விவாகரத்து நாடகத்தை நடத்தி வருகிறார் என ரோகித் குப்தா குறிப்பிட்டு இருக்கிறார். அதாவது ஹர்திக் பாண்டியா, அவரது மனைவி நடாஷாவால் பாதிக்கப்பட்டார் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி ரசிகர்களின் இரக்கத்தை பெறவே இந்த முயற்சி. இது எல்லாமே தோல்வி அடைந்த விளம்பர யுக்தி என அவர் குறிப்பிட்டார்.

இந்த விவாகரத்து சர்ச்சை எப்படி தொடங்கியது என்று பார்த்தாலே ரோஹித் குப்தா கூறுவது போல இது திட்டமிடப்பட்ட சர்ச்சையாக இருக்க வாய்ப்புள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். முதலில் ரெடிட் என்ற சமூக வலைதளத்தில் கிசுகிசு எழுதும் ஒரு பக்கத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கும், நடாஷாவிற்கும் கடந்த மூன்று மாதங்களாக சமூக வலைதளத்தில் எந்த பரிமாற்றங்களும் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டது.

அதற்கு அடுத்த நாள் ஹர்திக் பாண்டியா, அவரது மனைவி நடாஷா இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டது. அதற்கு அடுத்த நாள் இந்த விவாகரத்தால் நடாஷா ஸ்டான்கோவிக் 70 சதவீத சொத்துக்களை பெறுவார் எனவும் கூறப்பட்டது. ஆனால் இந்த ஊடக செய்திகள் எதற்குமே ஆதாரம் இல்லை.

இந்த நிலையில் நடாஷா ஸ்டான்கோவிக் மும்பையில் உள்ள காபி ஷாப் ஒன்றிற்கு வெளிநாட்டு ஜிம் பயிற்சியாளர் ஒருவருடன் வந்தார். அதை வைத்து அவர் நடாஷாவின் ஆண் நண்பர் என செய்திகள் பரவின. பின்னர் ஹர்திக் வெளிநாட்டில் தனிமையில் இருப்பதாக கூறப்பட்டது. தற்போது ஹர்திக் பாண்டியாவின் குழந்தை அகஸ்தியா, அவரது சகோதரரான க்ருனால் பாண்டியா வீட்டில் இருப்பது போன்ற ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. இந்திய அணியின் கேப்டன் பதவி.. ஹர்திக் பாண்டியாவுக்கு ஆப்பு வைத்த ஸ்ரேயாஸ்

இப்படி தினசரி ஒவ்வொரு விஷயமாக வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இதன் மூலம் விவாகரத்து என்ற இல்லாத ஒரு விஷயத்தை செய்தியாக்கி, தன் மீது ரசிகர்களை இரக்கம் கொள்ள வைக்கவும். தான் கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் போது தனக்கு ஆதரவு அளிக்க வேண்டியும் ஹர்திக் பாண்டியா நடத்தும் நாடகம் தானா இது? என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

Story first published: Tuesday, May 28, 2024, 19:38 [IST]
Other articles published on May 28, 2024
English summary
Hardik Pandya - Natasha Stankovic divorce is a failed PR stunt, says Rohit Gupta
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+