கடைசி ஓவரில் 15 ரன்னாக இருந்தாலும் அடிச்சிருப்பேன்.. ஹர்திக் மாஸ் பேச்சு.. வெற்றி பெற்றது எப்படி ?
துபாய் : ஆசிய கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
Recommended Video
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்த, ஹர்திக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து 148 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இந்திய அணி கடைசி 2 பந்துகள் எஞ்சிய நிலையில் திரில் வெற்றி பெற்றது.

ஆட்டநாயகன் விருது
கடந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு ஹர்திக்கின் மோசமான செயல்பாடு தான் காரணம் என்று கூறப்பட்டது. மேலும் அவர் முழு உடல் தகுதியுடன் விளையாடவில்லை என்ற புகார் எழுந்தது. தற்போது அடுத்த 10 மாதத்தில் இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது மட்டுமல்லாமல்,ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார்.

6 பந்தில் 18 ரன்
ஹர்திக் பாண்டியா முதலில் கொஞ்சம் பொறுமையாக விளையாடினார். 11 பந்துகளை எதிர்கொண்டு 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்த 6 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என மேலும் 18 ரன்கள் சேர்த்து ஹர்திக் இந்தியாவின் வெற்றியை தேடி தந்தார். தோனியை போல் ஆட்டத்தை கடைசி வரை கொண்ட சென்று, பிறகு வெற்றி கனியை பறித்தார்.

பந்துவீச்சின் பலம்
இது குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, பந்துவீசும் போது நமது ஆயுதம் எது என்பதை சூழலுக்கு ஏற்ப தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். என்னுடைய பலம் என்பது ஷாட் பந்தும், லெங்த் பப்ல் வீசுவதும் தான்.அதை சரியான பயன்படுத்தி பேட்ஸ்மேன்ளை தவறு செய்ய வைக்க வேண்டும்.

மாஸ் பேச்சு
ரன்களை சேஸ் செய்யும் போது, ஒவ்வொரு ஒவ்ருக்கும் பிளான் செய்து எதிர்கொள்ள வேண்டும். ஒரு இடதுகை சுழற்பந்தவீச்சாளர், ஒரு அறிமுக வீரர் பந்துவீசுவார்கள் என்று எனக்கு தெரியும்.இதனால் கடைசியில் 7 ரன்கள் தான் தேவைப்பட்டது. 15 ரன்கள் தேவைப்பட்டு இருந்தாலும் நான் அடித்திருப்பேன். காரணம், கடைசி ஓவரில் எப்போதும் பேட்ஸ்மேனை விட பந்துவீச்சாளர்களுக்கு தான் நெருக்கடி அதிகம். சிம்பிளாக போட்டியை அணுகினேன் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications