For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரிங்கு சிங் 5 சிக்சர் அடித்த பவுலரின் பாவமான நிலை.. 7 கிலோ எடை போச்சு.. யாஷ் தயாலின் அதிர்ச்சி நிலை

அகமதாபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஏதேனும் ஒரு வீரர் புகழை அடைந்தால் மற்றொரு வீரர் சரிவை சந்திக்க நேரிடும் அதுதான் கிரிக்கெட்டின் நீதியே. கடந்த சில நாட்களுக்கு முன்பு குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஆட்டம் இதுக்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டாகும்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கொல்கத்தா வீரர் ரிங்கு சிங் தொடர்ந்து ஐந்து சிக்ஸர்களை விளாசி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் இந்த ஓவரை வீசிய யாஷ் தயால் அதன் பிறகு ஒரு ஐபிஎல் போட்டியில் கூட பங்கேற்கவில்லை.

Hardik Pandya reveals the condition of Yash dayal after hitting 5 sixers by rinku singh

இதனால் அவர் என்ன ஆனார் என்று ரசிகர்களும் கேள்வி எழுப்பினர். தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ள குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, அந்த சம்பவத்துக்கு பிறகு யாஷ் தயால் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். கடந்த ஒரு வாரத்தில் யாஷ் தயால், ஏழு முதல் எட்டு கிலோ வரை உடல் எடை பாதிக்கப்பட்டு இருப்பதாக ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் அணியில் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டதாகவும் ,அதில் யாஷ் தயாலும் பாதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். யாஷ் தயாலுக்கு ஏற்பட்ட நெருக்கடி காரணமாக அவருடைய உடல் நலமும் பெருமளவு பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்ட ஹர்திக் பாண்டியா அதிலிருந்து யாஷ் தயால் மீண்டு வர இன்னும் சில காலம் ஆகும் என்று கூறியுள்ளார்.

யாஷ் தயால், உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டதால் தற்போது அவருக்கு பதில் மோகித் சர்மா குஜராத் அணியில் களம் இறங்குகிறார். கடந்த நான்கு போட்டிகளில் விளையாடிய மோகித் சர்மா ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திருக்கிறார். இதில் குறைந்தபட்சம் அவர் ஒரு ஓவருக்கு 6.15 ரன்கள் மட்டுமே வழங்கியிருக்கிறார். தற்போது புள்ளி பட்டியலில் குஜராத் அணி 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

Story first published: Wednesday, April 26, 2023, 16:40 [IST]
Other articles published on Apr 26, 2023
English summary
Hardik Pandya reveals the condition of Yash dayal after hitting 5 sixers by rinku singh ரிங்கு சிங் 5 சிக்சர் அடித்த பவுலரின் பாவமான நிலை.. 7 கிலோ எடை போச்சு.. யாஷ் தயாலின் அதிர்ச்சி நிலை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+