உம்ரான் மாலிக் மீது வைத்த நம்பிக்கை வீண் போகல.. இது ஸ்பெஷல் வெற்றி.. ஹர்திக் பாண்டியா மகிழ்ச்சி

டுபிளின்: அயர்லாந்து அணிக்கு எதிரான இருபது ஓவர் தொடரை இந்திய அணி 2க்கு 0 என்ற கணக்கில் வென்று அசத்தியது.

இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பு ஏற்ற முதல் தொடரிலேயே ஹர்திக் பாண்டியா வெற்றிக்கொடியை நாட்டியுள்ளார்.

யாரும் எதிர்பார்க்காத டிவிஸ்ட்.. இந்திய அணியில் 3 மாற்றம்.. சஞ்சு சாம்சனுக்கு புதிய பொறுப்புயாரும் எதிர்பார்க்காத டிவிஸ்ட்.. இந்திய அணியில் 3 மாற்றம்.. சஞ்சு சாம்சனுக்கு புதிய பொறுப்பு

இதே போன்று ஐபிஎல் கோப்பையையும் முதல் சீசனிலேயே குஜராத் அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா தட்டி சென்றார்.

பந்தயத்தில் முந்தினார்

பந்தயத்தில் முந்தினார்

இதன் மூலம் ரோகித் சர்மாவுக்கு பிறகு அடுத்த கேப்டன் என்ற பந்தயத்தில் ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுலை ஹர்திக் பாண்டியா ஓரங்கட்டியுள்ளார். 6 மாதத்திற்கு முன்பு, ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் கழற்றிவிடப்பட்ட ஹர்திக், இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைக்காமல் காயத்தால் அவதிப்பட்டார். தற்போது அடுத்த கேப்டன் என்ற லெவலுக்கு ஹர்திக் வளர்ந்துள்ளார்.

கவலை இல்லை

கவலை இல்லை

இந்த நிலையில் வெற்றி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, இறுதி ஓவரின் போது உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எந்த கவலையும் படவில்லை. நெருக்கடியில் சிக்க கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். எதை பற்றியும் நினைக்காமல் அந்த தருணத்தில் முழு கவனத்தோடு இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

உம்ரான் மீது நம்பிக்கை

உம்ரான் மீது நம்பிக்கை

உம்ரான் மாலிக் மீது எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. அவருடைய பந்துவீச்சின் வேகத்தை பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல. அயர்லாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். அவர்கள் விளையாடிய சில ஷாட்கள் எல்லாம் பிரமிக்க வைத்தன. எங்களுடைய பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களால் தான் வெற்றி பெற்றோம்.

ஸ்பெஷல் வெற்றி

ஸ்பெஷல் வெற்றி

ரசிகர்களுக்கு எங்கள் நன்றி. அயர்லாந்திலும் அதிகளவில் வந்து எங்களுக்கு ஆதரவு அளித்தார்கள். தினேஷ் கார்த்திக், சஞ்சு சாம்சனுக்கு பார்வையாளர்கள் அதிகளவில் ஆதரவு தந்ததை பார்க்க முடிந்தது. தீபக் ஹூடா மற்றும் உம்ரான் மாலிக்கின் ஆட்டங்கள் மகிழ்ச்சியை அளிக்கின்றன. நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பது சிறுவனாக இருக்கும் போதே என்னுடைய கனவு. ஆனால் கேப்டனாக முதல் தொடரை கைப்பற்றியது மிகவும் ஸ்பெஷலான தருணமாக கருதுகிறேன் என்று கூறினார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Hardik pandya speech about after winning the maiden series உம்ரான் மாலிக் மீது வைத்த நம்பிக்கை வீண் போகல.. இது ஸ்பெஷல் வெற்றி.. ஹர்திக் பாண்டியா மகிழ்ச்சி
Story first published: Wednesday, June 29, 2022, 9:30 [IST]
Other articles published on Jun 29, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X